Tuesday, August 26, 2014

சிரியாவுக்குள் நுளைந்தது அமெரிக்க போர் விமானங்கள் !

சிரிய அதிபர் அசாட்டின் எச்சரிக்கையை மீறி, அமெரிக்க போர் விமானங்கள் சிரியாவுக்குள் நுளைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் தலைதூக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரியாவிலும் தமது குழுவை ஆரம்பித்து அன் நாட்டின் எல்லைப் புறங்களில் உள்ள சில நகரங்களை கைப்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். பரந்து விரிந்து கிடக்கும் சிரிய நாட்டின் எல்லையில் என்ன நடக்கிறது என்பது சிரிய அரசுக்கே தெரியாது. அன் நாட்டு இராணுவத்தால் அதன் எல்லா எல்லைகளையும் பாதுகாகவும் முடியாது. இப்படியான ஒரு சூழலில் சிரிய நாட்டு எல்லையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் அதிகம் தங்கி பயிற்சிகளை எடுத்துவிட்டு பின்னர் ஈராக் நாட்டினுள் ஊருவி வருகிறார்கள்.
பல முறை அமெரிக்கா இது தொடர்பாக சிரியாவுக்கு தகவல் கொடுத்துள்ளது. ஆனால் அன் நாட்டு அதிபருக்கு அமெரிக்கவை பார்த்தால் சிம்மசொப்பனத்தை பார்பது போல இருக்கும். அதனால் அவர் தனை கண்டுகொள்வது இல்லை. இத்தீவிரவாதிகள் அமெரிக்காவை தான் தாக்க இருக்கிறார்கள். தாக்கட்டும் என்று நினைத்து அவர் மெளனமாக இருந்துவிடுவார். இதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் சிரியாவில் உள்ள விமானப்படை தளம் ஒன்றையும் கைப்பற்றிவிட்டார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. இது எவ்வாறு நடந்தது என்று அமெரிக்கா தலையில் கைவைத்துள்ளது. காரணம் என்னவென்றால் இது உண்மையில் நடந்ததா ?
இல்லை அதிபர் அசாட் இவ்வாறு சொல்லிவிட்டு , ஒரு தாக்குதல் விமானத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிடம் கொடுக்க இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சிரியாவின் எல்லையில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தளங்களை தாக்கி அழிக்க அமெரிக்க அதிபர் ஓபாமா நேற்று இரவு(25) கட்டளை பிறப்பித்தார். தாக்க்ய்தல் நடக்க சில மணி நேரங்களுக்கு முன்னர் தான், இத்தகவல் சிரியாவுக்கும் சொல்லப்பட்டது. அமெரிக்க F17 ரக விமானங்கள் , பாரிய தாக்குதலை நடத்தியது. அதற்கு முன்னதாக அமெரிக்கா அனுப்பிய வேவு விமானம் பல துல்லியமான தகவல்களை தனது தளத்திற்கு அனுப்பியது. அதனை வைத்தே அமெரிக்கா தாக்குதல் நடத்தியும் உள்ளது.
எங்கள் எல்லைக்குள் வந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது கடும் விளைவுகளை தோற்றுவிக்கும், என்று அதிபர் அசாட் மீடியாக்களில் பேட்டிகொடுத்துக்கொண்டு இருக்கும்போதே தாக்குதல் நடந்து முடிந்தும் விட்டது. அமெரிக்க வல்லாதிக்கத்தை என்ன செய்ய முடியும் ? அப்படியே ஒரு ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும்.
http://www.athirvu.com/newsdetail/869.html

No comments:

Post a Comment