Monday, August 25, 2014

ஆட்டின் விந்தணுவை வைத்து வியாபரம் செய்து கொடி கட்டிப் பறக்க நினைக்கும் கம்பெனி இதுதான் !




பிரித்தானியா- ஸ்கொட்லாந்திலுள்ள நிறுவனமொன்று ஆட்டுக்கடா ஒன்றினை, சுமார் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் பவுண்ஸூக்கு வாங்கியுள்ளது என அறியப்படுகிறது. கலப்பின ஆடுகளின் விந்தணுக்களின் மூலமாக திடகாத்திரமான ஆடுகளை உருவாக்கும் ஸ்கொட்லாந்தை சேர்ந்த நிறுவனமொன்றே ஆட்டுக்கிடாயை வாங்கியுள்ளது என மேலும் அறியப்படுகிறது. கிட்டத்தட்ட 1கோடியே 52 லட்சம் இந்திய ரூபாய்களுக்கு ஆடு ஒன்று வாங்கப்படுவது இதுதான் முதல் தடவை என்றும் கூறப்படுகிறது.
ஆறு மாதமேயான ஆட்டுக் கடா ஒன்றினையே அதிக விலைகொடுத்து இந்நிறுவனம் வாங்கியுள்ளதால், இந்த ஆட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது ஒரு அரியவகை ஆடு என்றும் கூறப்படுகிறது. இந்த அரியவகை ஆட்டிடம் ஒருமுறை சுரக்கும் விந்தணுவை, குறைந்தபட்சம் 100 பவுண்ஸூக்கு விற்பனை செய்வதன் மூலம் வாங்கிய முதலீட்டுக்கும் அதிகளவில் பெற்றுவிடலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒட்டு மொத்தத்தில் கடாவிடம் இருந்து விந்தணுவைக் கறந்து விற்கப்போகிறார்கள் என்பது மட்டும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. 

No comments:

Post a Comment