Sunday, August 31, 2014

ரோட்டில் பிணங்கள்: நாய்கள் கடித்து தின்னும் நிலையில் உள்ளது எபொல்லா வைரஸ் தாக்கம் !

undefined


எபொல்லா என்னும் படு பயங்கரமான வைரஸ் ஆபிரிக்க நாடுகளை தாக்க ஆரம்பித்துள்ளது, பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இது தொடர்பான செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டும் இருந்தது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இதன் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. எபொல்லா வைரஸ் தொற்றிக்கொண்டால், மரணம் நிச்சயம். இதற்கு தடுப்பு மருந்து கிடையாது. மிகமிக ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலை காணப்படுகிறது. லைபீரியா நாட்டையும் அதன் அயல் நாடுகளையும் இணைக்கும்எல்லைகள் அனைத்தையும் அயல் நாடுகள் முடிவிட்டார்கள்.
இதனால் இன் நாட்டில் உள்ள பலர் உதவிகள் ஏதும் இன்றி தவிக்கிறார்கள். அத்தோடு சிறிய கிராமங்களில் உள்ளவர்களுக்கு , இன் நோய் ஏற்பட்டால் அவர்கள் இறக்கும்வரை அவர்களை எவரும் பராமரிப்பதே கிடையாது. இதனால் நோயின் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் எதுவித உதவிகளும் கிடைக்காமலே நாடு வீதிகளில் இறந்து கிடக்கிறார்கள். இவர்களின் உடலை நாய்கள் தான், தின்கிறது.


No comments:

Post a Comment