Thursday, August 21, 2014

பெண்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் ஆபத்து


மாறிவரும் சமூகத்தில் நமது வசதிக்கேற்ப நாம் பல்வேறு தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்.
அதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைத்தாலும், அதற்கேற்ப ஆபத்துகளும் பெருகிக் கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில் இப்போது உள்ள இளம் தலைமுறையினரை ஆட்டிபடைக்கும் ஒன்று சமூக வலைதளங்கள். பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால் தற்போது செல்போனில் பயன்படும் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது.
அது எப்படி நான் என் செல்போனில் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே. அதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்கும் வரும்.
அப்படி என்ன ஆபத்து?
உங்களின் மொபைல் நம்பர் மற்றவர்களிடம் இருந்தால் மட்டுமே அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை தரவிறக்கம் செய்யவும் முடியும்.
ஆனால் உங்களை தெரியாத நபர்கள் கூட உங்களை தொடர முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?
உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குரூப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்படப்படுகிறது என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

உஷார் தோழிகளே!
இதனை உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம்.
குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.
மிக கவனமாக செயல்படுங்கள், சிறிய விடயம் மோசமானதாக மாறக்கூடும்..உஷார் தோழிகளே.

No comments:

Post a Comment