Tuesday, August 26, 2014

இந்தியா போல மாறிவரும் லண்டன் பொலிசார் ! அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது !

இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் உள்ள பொலிசார், லஞ்சம் பெறுவது வழக்கம். எதற்கு எடுத்தாலும் அவர்கள் லஞ்சம் கேட்ப்பார்கள். இதனை நாம் பல சினிமாவிலும் பார்த்திருப்போம். ஆனால் பிரித்தானியா போன்ற நாடுகளில் அவ்வாறு நடப்பது இல்லை. மிகவும் ஒழுக்கமாக பொலிசார் காணப்படுகிறார்கள். அப்படி என்று தான் நாமும் இவ்வளவு காலமாக நினைத்து வந்தோம். அது தான் இல்லை. கடந்த ஆண்டில் மட்டும், சுமார் 460 பிரித்தானியப் பொலிசார் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். இவர்கள் லஞ்சம் வாங்கிய மற்றும் ஏனைய கையாடல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மதுபோதையில் காரை ஓட்டிய நபர் காசு கொடுக்க அதனை வாங்கிக்கொண்டு மெளனமாக சென்ற பொலிசாரும் இதில் அடங்குகிறார்கள்.
இதுபோக ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள, சிலர் பொலிசாருக்கு காசைக் கொடுக்கிறார்கள். அதனைப் பெற்றுக்கொள்ளும் பொலிசார் குறித்த நபரின் வீடு அவர் காரின் இலக்கம், தொடக்கம அனைத்தையும் காசுக்காக விற்றுவிடுகிறார்கள். இதுவே மேலும் அதிர்சி தரும் தகவலாக உள்ளது என்று மெற்றோ பொலிடன் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு செய்யும் பொல்ஸ் காரர்களை, தண்டிக்க தான் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிவேகமாக சென்ற கார் ஒன்றை மறித்த பெண் பொலிசார், அந்த விலையுயர்ந்த காரில் பயணம் செய்த ஆணைப் பார்த்து காதல் வயப்பட்டுள்ளார். மோபைல் தொலைபேசி இலக்கத்தை வாங்கிக்கொண்டு, இன்சூரன்ஸ் இல்லாத அந்த காரை ஓட்டிச் செல்ல அவர் அனுமதித்தும் உள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் மோபைல் போனில் குறுந்தகவல் அனுப்பி விளையாடி மாட்டுப்பட்ட செய்தியை கூட நாம் அதிர்வில் முன்னர் பிரசுரித்து இருந்தோம். இதுபோல பிரித்தானியாவிலும் தற்போது பொலிசாரின் அட்டகாசம் கூடிவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/871.html

No comments:

Post a Comment