Tuesday, August 19, 2014

மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட மாபெரும் தவறும் : சட்ட ஆலோசனை பெறும் குடும்பமும் - அதிர்ச்சி சம்பவம்

நான்கு குழந்தைகளின் தாயாரான கிளாய எனும் பெண்ணுக்கு ஒரு அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் அவர் மேற்கொண்டிருந்த மருத்துவ சிகிச்சையுடன் தொடர்பட்டது என்பது அவருக்கும் மட்டும் அல்லாமல் பொது மக்களுக்கும் அதிர்ச்சியாக இருந்ததுடன் மருத்துவத்தில் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் கடந்த யூலை மாதம் 16 ஆம் திகதி அவரது அடி வயிற்றில் ஒரு சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் 10 நாட்களில் குறித்த சத்திர சிகிச்சையின் தையல் பிரிப்பதற்கு சென்றுள்ளார். அந்த தையலும் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தான் அவருக்கு பிரச்சனை ஆரம்பித்தது. தையல் பிரிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் குளியல் அறையில் தையல் போடப்பட்ட பகுதி இரண்டாக பிளவு பட்ட நிலையில் தாய் இருப்பதனை அவரது 13 வயதான மகள் ஷனொன் கண்டு அலறியுள்ளார். இந்த பிளவு 9 அங்குலமாக இருந்துள்ளது.
இந்த நிலை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தொல்லைகள் தொடர்ந்து வந்தன.
வயிறு பிளந்த நிலையில் இருந்த மனைவியை கண்ட கணவன் மாலை 5.30 மணிக்கு நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்துள்ளனர். ஆனால் வண்டி 7.06 மணி வரை வரவில்லை என்பது வருத்தத்திற்கு உரியதே. இதேவேளை நிலமை மேலும் மோசமாக மாறாமல் இருப்பதற்காகவும் குருதிப்பெருக்கை கட்டுப்படுத்தவும் பெண்ணின் கணவர் வேறு வழியின்றி முதல் உதவியாக மருத்துவ ரேப் எடுத்து இரு பகுதியையும் இழுத்து ஒட்டியுள்ளார். வைத்தியசாலைக்கு எங்கள் காரில் செல்லாம் என்று கணவர் கூறியமைக்கு மனைவி ஒத்துக்கொள்ளவில்லை.
ஏழுமணிக்கு பின்னர் வந்த நோயாளர் காவு வண்டியில் வைத்தியசாலை சென்றவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. அங்கு வைத்தியர் குறித்த பெண்ணை வந்த பார்ப்பதற்காக 4 மணி நேரம் காத்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை பற்றி கருத்து தெரிவித்த கணவர், குறித்த தையல் பிளவு என்பது பைகளின் சிப் திறந்திருப்பது போன்று 9 அங்குரம் அளவுக்கு இருந்தது என்றும் பின்னர் நோயாளி காவு வண்டிக்காக காத்திருந்தமையும் அதன் பின்னர் வைத்தியருக்காக காத்திருந்தமையும் தனது மனைவிக்கு தேவையற்ற வலியையும் மனப் பயத்தையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் லண்டனில் இம்பெற்றுள்ளது. மற்றும் வைத்தியசாலை போன்றனவற்றின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன
  
 

No comments:

Post a Comment