Tuesday, August 26, 2014

தொண்டமானாறு செல்வச் சன்னதியில் சிறப்புற்ற கொடியேற்றம் ( படங்கள் இணைப்பு)!


வரலாற்றுப் புகழ் மிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச் சன்னதி ஆலய வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கள் கிழமை இரவு 10.30 மணியளவில் அடியவர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் இடம் பெற்றது.

அடியவர்களின் தூக்குக் காவடி மற்றும் கற்பூரச் சட்டி எடுத்தும் அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர். சுவாமி உள் வீதி, வெளி வீதி உலா வரும் நிகழ்வும் இடம் பெற்றது.

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டார்கள். வடமராட்சி வலிகாமம் தென்மராட்சி பகுதிகளைச் சேர்ந்த அடியவர்கள் தமது சொந்த வாகனங்களில் வந்திருந்ததுடன் தூர இடங்களில் இருந்து வந்தவர்கள் ஆலய சுற்றாடலில் உள்ள மடங்களில் தங்கியிருந்தார்கள்.

இரவு வேளையில் ஆலயத்திறக்கான இரவு தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாமையால் அதிகளவான அடியவர்கள் ஆலய கொடியயேற்ற நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

26 Aug 2014

No comments:

Post a Comment