Tuesday, August 26, 2014

முதலாளியை புதைத்த இடத்தைவிட்டு நகர மறுத்த நாய்

சென்னையில் சாலை விபத்தில் பலியான ஒருவர் வளர்த்த நாய் அவரை புதைத்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடியில் வசித்து வரும் சுந்தரி (50) என்பவரது 18 வயது மகனான பாஸ்கரன் டாமி என்ற நாய் ஒன்றை வளர்த்துவந்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த ஆகஸ்ட் 2ம் திகதியன்று விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
இதையடுத்து அவரது உடல் ஆவடி பாலத்திற்கு கீழ் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டுள்ளது.
தனது முதலாளியான பாஸ்கரன் புதைக்கப்பட்ட இடத்தை இரவு முழுவதும் சுற்றி வந்த டாமி, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உண்ணாமல் மறுநாள் காலை வரை சமாதியிலேயே படுத்து கிடந்துள்ளது.
இதை பார்த்த ப்ளு கிராஸ் குழுவினர் நாயை காப்பாற்ற முயற்சித்த போது அது சமாதியை விட்டு நகர மறுத்துள்ளது.
பின்னர் அவர்கள் பாஸ்கரனின் தாயான சுந்தரி வசிக்கும் வீட்டிற்கு சென்றபோது மகன் இறந்தவுடன் டாமி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
டாமி சுடுகாட்டில் இருப்பதை கூறி சுந்தரியை அழைத்து சென்றபோது, சுந்தரியை பார்த்த டாமி ஒடி வந்து அவரது காலை தழுவியுள்ளது.
இதையடுத்து சுந்தரி டாமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

No comments:

Post a Comment