Thursday, August 21, 2014

பிரித்தானியாவில் ஏ.டி.எம் நிலையங்களில் கொள்ளையடித்த குழுவினர் பொலிஸாரால் கைது !


பிரித்தானியாவில் ஏ.டி.எம் நிலையங்களில் 16 மில்லியன் பவுண்ஸ் பணத்தை கொள்ளையடித்த கும்பலொன்றை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். ரோமானியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றே இவ்வாறு ஏ.டி.எம். நிலையங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளர். ஏ.டி.எம். நிலையங்களில் பணமொடுக்க வந்தவர்களின் இரகசிய இலக்கத்தை அபகரித்து பிரித்தானியா முழுவதும் சுமார் 16 மில்லியன் பவுண்ஸ் பணத்தை கொள்ளையடித்துள்ள கும்பலையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் சுமார் 60,000 வங்கிக் கணக்குகளில் இவர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டியுள்ளனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. ரோமானியாவை சேர்ந்த 30 வயதுடையவர்களான Florin Ioan Silaghi, Vasile Daniel Pop மற்றும் 27 வயதுடைய Ovidiu Metac 25 வயதுடைய Adriana Alexandra Turc ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றே பிரித்தானியாவிலுள்ள சுமார் 1000 ஏ.டி.எம் நிலையங்களில் அதிநவீன கமரா ஒன்றினை ஏ.டி.எம் இயந்திரத்தினுள் பொருத்தியுள்ளனர். இந்த கமரா மூலம் வாடிக்கையாளர்களின் பின் நம்பரை தெரிந்து கொண்டு, போலியான ஏ.டி.எம் அட்டைகள் மூலம் இரகசிய இலக்கத்தைப் பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இந்தக் கொள்ளைக் குழுவினர் இதுவரை இத்தாலி- கொலம்பியா- ரோமானியா மற்றும் பனாமா ஆகிய நாடுகளில் தங்களது கைவரிசையை காட்டிவிட்டு தற்போது பிரித்தானியாவை தங்கள் அடுத்த இலக்காக வைத்துள்ளனர். இவர்களை பிரித்தானிய பொலிஸார் பொறிவைத்து பிடித்து கூண்டோடு கைது செய்துள்ளனர். இவர்களிடம் தற்போது பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் இந்த கும்பலில் ஒரு பெண்ணும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment