Tuesday, August 19, 2014

வாழைச்சேனையில் 950 கிலோ கிராம் நிறையுள்ள சுறா- கார் விபத்தில் இருவர் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு!


வாழைச்சேனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகிலிருந்து திங்கட்கிழமை 950 கிலோ கிராம் நிறையுடைய கொடிச்சுறா பிடிபட்டுள்ளது.
வாழைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.சம்சுதீன் என்பவரின் படகில் சென்ற மீனவர்களே இம்மீனை ஆழ்கடலிருந்து கரைக்கு கட்டி இழுந்து வந்துள்ளனர்.
இம்மீன் கருவாட்டுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருக்குமென்று படகு உரிமையாளர் என்.எம்.சம்சுதீன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கார் விபத்து- வங்கி முகாமையாளர் உட்பட இருவர் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு
மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கார் விபத்தில் அதில் பயணம் செய்த இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.
வேகமாக வந்த கார் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் பிரதான வீதியில் நடுவில் கட்டப்பட்டிருந்த கட்டில் மோதுண்டு தடம்புரண்டுள்ளது.
எனினும் இதில் பயணித்த கார் சாரதியும் அதன் உரிமையாளரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் இயங்கும் தனியார் வங்கியின் முகாமையாளர் தயாபாரன் மற்றும் அவரது காரின் சாரதி சாந்தகுமார் ஆகியோரே சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment