Thursday, August 28, 2014

உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட 7 வயது சிறுமி: உ.பி.யில் கொடூரம்!

உத்தரபிரதேசத்தில் 7 வயது சிறுமி உயிருடன் மண்ணில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அலோக் குமார் என்ற நபர் அங்குள்ள ஒரு கரும்பு தோட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது, அங்கு ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதையடுத்து அழுகை சத்தம் வந்த கரும்பு தோட்டத்தின் உள்ள ஒரு இடத்தில் மண் குவியல் நகர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த அந்த சிறுமி வெளியே வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்துள்ளார்.
இதைக்கண்ட அலோக் குமார் உடனடியக மண் குவியலை அகற்றி சிறுமியை மீட்டபோது அரை மயக்கத்தில் இருந்த சிறுமியை அருகில் உள்ள மான்பூர் காவல் நிலையத்திற்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளார்.
அந்த சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதை பார்த்த பொலிசார் அவள் நினைவு திரும்புயதும் நடத்திய விசாரணையில், அவள் பெயர் தானு என்பதும், கவுரா மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதும் தெரியவந்துள்ளது.
தனது தாயாருடன் வசித்தபோது அவளது அத்தை - மாமா உள்ளிட்ட சிலர் தன்னை தூக்கி கொண்டு சென்று கழுத்தை நெறித்து மண்ணுக்குள் புதைத்தாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்கள் யார் என்பதை தானுவால் சரியாக அடையாளம் காட்ட இயலவில்லை என்று சிதாபூர் காவல் நிலையை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் விசாரணையில், கடந்த ஆகஸ்ட் 20ம் திகதிக்கு பிறகு சிறுமியும் அவளது தாயாரையும் காணவில்லை என்று தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சியில் இந்த செய்தி ஒளிபரப்பானதை பார்த்த . தானுவின் தாய் வழி பாட்டி, பொலிசாரை அணுகியுள்ளார்.
அவர் கூறுகையில், என் மகள் கடந்த 15 தினங்களுக்கு என்னிடம் தகவல் ஏதும் தெரிவிக்காமல் தானுவுடன் புறப்பட்டு சென்று விட்டாள் என்று தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது சிறுமி தானுவின் தாய் ரேனுவை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டு இருந்த தானு, சிகிச்சைக்கு பிறகு தனது பாட்டியுடன் அனுப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment