நியு யேர்சியில் உள்ள Capitol Lighting என்ற ஒளி சாதனங்கள் கம்பனியில் வாரத்தில் 4-நாட்கள் வேலை செய்கின்றார். இவரது சக ஊழியர்கள் திங்கள்கிழமை இவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போரின் போது யு.எஸ். இராணுவத்தில் சிறிது காலம் கடமையாற்றுவதற்கு சென்ற இவர் Capitol Lighting கம்பனியில் 1941-ல் இருந்து பணிபுரிகின்றார்.
ஆரம்பத்தில் பொருட்களை விற்றல், சேகரித்தல் மற்றும் காட்சிப் பொருட்களை துப்பரவு செய்தல் போன்ற பணிகளிற்காக அமர்த்தப்பட்டார். தற்சமயம் பழுதடைந்த,  பாவனைக்கு உதவாத பொருட்களை மறுசீரமைப்பு செய்வதில் சிறந்து விளங்குகின்றார் என இவரது சக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
கம்பனிக்கு வேலைக்கு வரும் போது தானே வாகனம் செலுத்தி வருகின்றார் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
man3

manman1man4