Wednesday, August 20, 2014

பாலியல் தொழிலுக்கு 500 பெண்களை விற்பனை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)

அமெரிக்கர்களை கொன்று குவிப்போம்: ரத்தவெறியில் ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 05:46.40 மு.ப GMT ]
அமெரிக்க இராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் கொன்று ரத்தத்தில் மூழ்கடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிவிட்ட ஐ. எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் யாஸிதி சிறுபான்மையின மக்களை காப்பாற்ற அமெரி்க்கா தனது விமானப்படையினரை அனுப்பி தாக்குதலில் ஈடுபட்டிருந்தது.
எனினும் தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் தினந்தோறும் நகரங்களை கைப்பற்றி வருவதால், அமெரிக்கா தனது தாக்குதலை விரிவுபடுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் காணொளி ஒன்றின் மூலம் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரின் தலை கொடூரமாக வெட்டப்பட்டுள்ள இந்த காணொளியில், ஆங்கில தலைப்புடன் ஓடியோ அறிக்கை ஒன்றை தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் கூறியதாவது, எங்களது வீரர்கள் யாரையாவது அமெரிக்க விமானப்படையினர் தாக்கினால், மிக மோசமான பதிலடியை நாங்கள் கொடுப்போம் என்றும் அமெரிக்கர்களை எங்கு கண்டாலும் கொன்று குவித்து, ரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
http://newsonews.com/view.php?22cOl72bcW80Mb4e3IMC402dBnB3dd0nBn5303C6A42e4608Secb3lOSc3

பாலியல் தொழிலுக்கு 500 பெண்களை விற்பனை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 04:22.46 மு.ப GMT ]
ஈராக்கில் பிற மதப் பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளைக் கொண்டு இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினர் உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் மொசூல் நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட பிற மதப் பெண்களை விலைமாதுக்களாக விற்பனை செய்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக பல கிறிஸ்துவ பெண்களே அதிகளவில் விற்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் தப்பி ஓடும் பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.
http://newsonews.com/view.php?223BBnnnbbcccM6AA444ee0008800033llOOOdddddOOlll220088800eee444IMMqccbbbnnBBB23

No comments:

Post a Comment