வாசிங்டன்- இஸ்லாமிய அரசின் ISIS . அமெரிக்க பெண் ஒருவரை கடந்த வருடத்தில் இருந்து சிரியாவில் பிணைக்கைதியாக வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
26-வயதுடைய இப்பெண் கடத்தப்பட்ட சமயம் பல மனிதாபிமான குழுக்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பயம் கருதி யு.எஸ். அரசாங்கமும் பெண்ணின் குடும்பத்தினரும் பெயர் வெளியிடப்படுவதை விரும்பவில்லை. இவர் சம்பந்தப்பட்ட மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ISIS  குழுவினரால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தார்களென தெரியப்பட்ட மூவரில் இவரும் ஒருவராவார். James Foley என்பவர் ஒரு வாரத்திற்கு முன்னர் இக்குழவினரால் சிரைச்சேதம் செய்யப்பட்டார்.
இன்னுமொரு அமெரிக்கர் வேறொரு குழவினரால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டுள்ளார். இந்த வார முற்பகுதியில் விடுதலை செய்யப்பட்ட Peter Curtis என்பவரும் இதற்குள் அடங்குவார்.