Thursday, August 21, 2014

பாரிசில் சினிமா பாணியில் சவுதி இளவரசர் காரை மறித்து 200,000 ஆயிரம் யூரோ கொள்ளை !


மன்மதராசா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர், சவுதி நாட்டு இளவரசர். இவர் தனது படுக்கையறைக்கு குறைந்தது 2 பெண்களுடனாவது செல்வதே வழக்கம். வட இந்திய நடிகைகளை சவுதிக்கு அழைத்து, தனது வீட்டில் அவர்களை நடனமாடச் சொல்வதும் இவர்தான். அதற்காக இவர் கோடிக்கணக்கில் பணத்தை கொடுப்பார். இப்ப புரியுமே நாம் ஏன் இவரை மன்மதராசா என்று கூறுகிறோம் என்று ? இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பாரிஸ் சென்றிருந்தார். 2 மாதமாக அவர் ஆடம்பர விடுதி ஒன்றில் தான் தங்கியிருந்தார். சில அராபிய அழகிகளும் இவருடன் கூடவே சென்றிருந்தார்கள். பாரிசில் இவர் விடுமுறையைக் கழித்துவிட்டு, அருகில் உள்ள வினாம நிலையன் ஒன்றுக்குச் சென்று அங்கே இருந்து பிரைவேட் ஜெட் மூலம் பிறிதொரு இடம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
இவரது காருக்கு பாதுகாப்பு வழங்க சுமார் 10 கார்களில், தனிப்பட்ட பாதுகாவலர்கள் சென்றார்கள். அவர்கள் கைகளில் தானியங்கி துப்பாக்கியும் இருந்தது. இவர்களது வாகனத் தொடரணி விமானநிலையம் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தவேளை சற்றும் எதிர்பார்காத சம்பவம் ஒன்று இடம்பெற்றது. கணப்பெழுதில் இவர்களது வாகனத் தொடரணி மீது பாரிய தாக்குதல் நடந்தது. ஏகே47 ரக துப்பாக்கிகளுடன் அங்கே வந்த சிலர், மின்னல் வேகத்தில் சவுதி இளவரசரின் காரை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டார்கள். இதனால் பாதுகாப்புக்குச் சென்ற 75 பேரால் எதனையும் செய்ய முடியவில்லை.
இளவரசரின் காரில் சுமார் 200,000 யூரோக்கள் காசாக இருந்துள்ளது. இந்த விடையம் கொள்ளைக் கோஷ்டியினருக்கு ஏற்கனவே தெரிந்தும் உள்ளது. அவர்கள் அப்பணத்தை கொள்ளையடித்ததோடு, சில முக்கிய டாக்குமென்டுகளையும் எடுத்துக்கொண்டு மின்னலாக மறைந்துவிட்டார்கள். அவர்களை துரத்திச் செல்லவும் முடியவில்லை. ஏன் என்றால் சவுதி இளவரசர் பாதுகாப்பே முக்கியம் ஆகும். அதனால் அவருடன் காவலுக்கு வந்தவர்கள், அங்கிருந்து தப்பித்தால் மட்டும் போதும் என்று நினைத்து வேகமாக அவ்விடம் விட்டு சென்றுவிட்டார்கள். சாட்சாத் சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளையால் மிகவும் அதிர்சியில் இருக்கிறாராம் மன்மதராசா. 

No comments:

Post a Comment