Sunday, August 24, 2014

கொல்லப்பட்ட பாம்பு: 20 நிமிடங்களின் பின்னர் தன்னை கொன்ற ஆளை கடித்து பழிவாங்கியது, சீனாவில் நடந்த சம்பவ்ம் !

பொதுவாக உலகில் உள்ள ஊர்வன அனைத்தும், அதன் உடல்வேறு தலைவேறாக வெட்டப்பட்டாலும் சுமார் 1 மணித்தியாலம் வரை உயிரோடு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்து நிஜமாகியுள்ளது. ஆம சீனாவில் ஒரு பிரபல உணவகத்தில் வேலைபார்த்த சமையல் காரர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். நாக பாம்பு கறி ஒன்று தேவை என்று அங்கே வந்த கணவனும் மனைவியும் ஆடர் செய்துள்ளார்கள். உயிருடன் இருந்த பாம்பை மிகவும் கவனமாக பிடித்த அவர், அதனை தலையை முதலில் வெட்டி விட்டார். 20 நிமிடங்களில் அவர் தலைக்கு கீழ் உள்ள சதையை எடுத்து கறி சமைத்தும் விட்டார். அதனை பரிமாற பெண்ணை அழைத்து , கொண்டு போய் கொடுக்கும் படி செல்லிவிட்டு, எஞ்சியுள்ள குப்பைகளை எடுக்க முயற்சித்துள்ளார்/
இறந்த பாம்பு தானே என நினைத்து, துண்டாக வெட்டப்பட்ட அந்த பாம்பின் தலையை எடுத்து, குப்பை பையில் போட முற்பட்டவேளை, அவ்வளவு நேரமாக அசைவின்றி இருந்த அந்த நாகத்தின் தலை உடனே அவரைக் கடித்துள்ளது. இதனை அவர் சற்றும் எதிர்பார்கவில்லை. நாம் ஒரு விடையத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பாம்பு, பூரான், புளுமிலச் சிலந்தி போன்ற ஊர்வன அவ்வளவு எழிதில் சாக மாட்டாது என்று எமது முன்னோர்கள் கூறுவதை நினைவில் கொள்ளவேண்டும். இவ்வகையான ஊர்வன 1 மணித்தியாலம் வரை உயிருடன் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த குறித்த நாக பாம்பும் அப்படி தான். தன்னைக் கொன்ற நபரை இறந்தும் 20 நிமிடங்களுக்கு பின்னர் பழிவாங்கியுள்ளது என்றால் பாருங்களேன்.
நஞ்சு தனது கையில் ஏறுகிறது என்பதை உணர்ந்த அன் நபர், நோவைக் கூடப் பாரால் தனது கரத்தை கத்தியால் வெட்டியும் உள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே நஞ்சு பரவ ஆரம்பித்துவிட்டது. உதவி கிடைக்க நேரம் தாமதமானதால் அவர் வாயில் நுரை தள்ள பரிதாபமாக இறந்துபோனார். ஊர்வனவற்றை நாம் அடித்து சா காட்டினால் கூட, அதனை மிகவும் கவனமாக கையாளவேண்டும். இல்லையென்றால், அவை மீண்டும் தாக்கும் திறன் கொண்டவை, எனவே நாம் தான் தாக்குதலுக்கு உள்ளாவோம்.
இளகிய மனம் கொண்டவர்கள் இந்த வீட்டியோவைப் பார்கவேண்டாம்: 

No comments:

Post a Comment