Saturday, August 30, 2014

100 மில்லியன் பெறுமதியான மச்கெண்ணை: ஆனால் கடலில் மாயமாக மறைந்துபோன கப்பல் எங்கே ?


சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான மசகெண்ணையை ஏற்றிக்கொண்டு கடலில் பயணித்த, பெரும் கப்பல் ஒன்று மாயமாக மறைந்துள்ளது. இக் கப்பலில் இருந்து வரும் சமிஞ்சையை வைத்தே கப்பல் நிற்கும் இடத்தை ராடர் கருவி மூலம் அவதானிக்க முடியும். மிகவும் பாதுகாப்பாகவும் இக் கப்பல் இருந்தது. ரெக்ஸ்சஸ் மாநிலத்தில் இருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில், இக் கப்பல் கடைசியாக நின்றுள்ளது. ஆனால் திடீரென அக் கப்பலில் இருந்து வரும் சிக்னல் நின்றுவிட்டது. இதனால் கப்பல் ராடர் திரைகளில் இருந்து மறைந்தும் விட்டது. மிகவும் பெறுமதியான மசகெண்ணையை இக் கப்பல் தாங்கிகளில் வைத்திருந்தது.
மசகெண்ணை என்பது, நிலத்தில் தோண்டி எடுக்கப்படும் பெற்றோலிய எண்ணெய் ஆகும். இதனை வடிகட்டினால் முதலில் சூபர் பெற்றோல் வரும். இதனை விமானத்தின் எரிபொருளாக பாவிப்பார்கள். பின்னர் பெற்றோல், அதன் பின்னர் டீசல், பின்னர் பரஃபின், பின்னர் மண்ணெண்ணை என்று எரிபொருட்களை பிரித்து எடுக்கலாம். இதன் காரணமாகவே மசகெண்ணை மிகவும் பெறுமதி வாய்ந்தது. குறித்த இந்த கப்பல் காணாமல் போனது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பிட்ட இக் கப்பலை கொள்ளையர்கள் கொள்ளையடித்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இல்லையென்றால் கப்பலில் உள்ளவர்களே இதனை காசுக்காக கடத்தியும் இருக்கலாம்.
ஒரு கப்பலில் 100 மில்லியன் பெறுமதியான மசகெண்ணை இருக்கிறது என்றால், இதனை ஏற்றுமதி செய்யும் நாடுகள் எவ்வளவு செல்வந்த நாடாக இருக்கவேண்டும் என்று எண்ணிப்பாருங்கள். பெரும் பாலும் அரபு நாடுகளே மசகெண்ணையை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். மசகெண்ணையை அகழும் நிலையங்கள் பெரும்பாலும் தனி நபர்களுக்கே சொந்தமாக உள்ளது. இவர்களே உலகின் பெரும் செல்வந்தர்களாவும் உள்ளார்கள்.

No comments:

Post a Comment