20-வயது மதிப்புடைய இப்பெண் Finch Avenue  மற்றும்  Humberline Drive பகுதியில் காலை 6-மணிக்கு முன்பாக விபத்திற்குள்ளாகியுள்ளார்.
பெண்ணை பேரூந்திற்கு அடியில் இருந்து வெளியே எடுப்பதற்கு அவசரசேவை மருத்துவப்பிரிவினர் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். பெண் அவரிற்கேற்பட்ட காயங்கள் காரணமாக சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டார்.
விபத்து நடந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்தது. வழுக்கலான வீதி விபத்து நடக்க காரணமாக இருந்திருக்கலாமா என அறிய  பொலிசார் முயன்று வருகின்றனர்.
ஒன்ராறியோவின் தென்பாகத்தில் இரவு தொடர்ந்து  பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யோர்க் பல்கலைக்கழக கீல் வீதி வளாகத்திற்கு அருகில் வாகன சாரதி ஒருவர் மின்கம்பத்துடன் மோதியதால் அப்பகுதி பேரூந்து சேவைகள் திசை திருப்ப பட்டன.
busbus2
bus1