Saturday, July 26, 2014

கோர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் (புகைப்படங்கள்)!

10 நிமிடத்தில் போக வேண்டிய உயிர் 117 நிமிடங்கள் துடித்த கொடுமை.!

[ Jul 26, 2014 04:28:50 AM | வாசித்தோர் : 5810 ]
வாஷிங்டன்: 
அமெரிக்காவில் ஒரு மரண தண்டனைக் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட விஷ மருந்து வேலை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அவர் 117 நிமிடங்கள் உயிர்ப் போராட்டம் நடத்தி மிகவும் கொடூரமாக தனது முடிவை சந்திக்க நேரிட்டது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மரண தண்டனையை ஒழிக்கக் குரல் கொடுத்து வரும் அமைப்புகள், ஆர்வலர்கள் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும். இப்படி ஒரு கொடூரமான முறையில் ஒருவரின் உயிரைப் பறித்த செயல் மிகவும் கொடுமையானது என்றும் அவர்கள் குரல் கொடுத்துள்ளனர். அரிசோனா கோர்ட் ஒன்று, ஜோசப் உட் என்பவருக்கு மரண தண்டனை கொடுத்தது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதையடுத்து அரிசோனா சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜோசப்புக்குப் போடப்பட்ட விஷ மருந்து வேலை செய்ய கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்துக் கொண்டதால் அந்தக் குற்றவாளி கடுமையான உயிர்ப் போராட்டத்துக்குள்ளானார்.
மூச்சுத் திணறியும், கடுமையாக அவஸ்தைப்பட்டும் அவர் உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட 117 நிமிடங்கள் ஜோசப் கடும் வலியிலும், வேதனையிலும், மூச்சுத் தினறலாலும் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆனால் இதை கூடியிருந்த வக்கீல்கள், சாட்சிகள், சிறை அதிகாரிகளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.. காரணம் அது மரண தண்டனை என்பதால். அவருக்கு மரண தண்டனைக்காக மிடசோலம் மற்றும் பெயின் கில்லரான ஹைட்ரோமார்போன் ஆகியவை கலந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்துகளை முன்பே பரிசோதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மரணத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டு விட்டது.
வழக்கமாக இதுபோன்ற மரண தண்டனையின்போது போடப்படும் ஊசி மருந்தால், 10 நிமிடத்தில் உயிர் போய் விடும். ஆனால் ஜோசப்புக்குப் போடப்பட்ட மருந்து சரியில்லை என்பதால் அவர் 2 மணி நேரம் துடித்துப் பின் அடங்கியுள்ளார். உலகில் மரண தண்டனை ஒழிக்கப்படவேண்டும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், மரண தண்டனை வழங்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பல கைதிகள் , பின்னர் பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் நிரபராதி என்று கண்டுபிடிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளது. ஆனால் அந்த உர்களை திருப்பி பெறமுடியுமா ? எனவே தான் மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என சில சாரார் இதுவரை போராடி வருகிறார்கள் 
http://www.athirvu.com/newsdetail/568.html

கோர விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர் (புகைப்படங்கள்)

[ Jul 26, 2014 04:47:30 AM | வாசித்தோர் : 2845 ]
கோரமான வீதி விபத்திலிருந்து இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த இருவர் பயணித்த காருக்கு மேலாக கொள்கலன் தாங்கிய வாகனம் பயணித்ததில் கார் முற்றாக சேதமடைந்தது. இவ்விபத்தை நேரில் பார்த்தவர்களும், சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த தீயணைப்பு படையினரும் காரில் இருந்தவா்கள் நிச்சியமாக உயிரிழந்திருப்பார்கள் என எண்ணினர்.
எனினும் பயணித்த இருவரும் உயிருடன் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். அவர்கள் தம்மை காப்பாற்றுமாறு கேட்ட வண்ணம் இருந்தனர். துரிதமாக செயற்பட்ட மீட்பு பணியாளர்கள், பாரம் தூக்கியின் உதவியுடன் கொள்கலனை அகற்றி காரிலிருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். கொள்கலன் ஏற்றிய வாகனம் காரின் மீது சரிந்தமையாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்கலன் ஏற்றிய வாகனத்தின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

http://www.athirvu.com/newsdetail/569.html

No comments:

Post a Comment