Saturday, July 26, 2014

பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மக்கள் கொடுத்த தகுந்த தண்டனை: - இந்தியாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொண்று மரம் ஒன்றில் தூக்கிலிட்ட குற்றவாளிகளுக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துள்ளனர். கடந்த வாரத்தில் இந்தியாவின் பல பாகங்களிலும் பல பாலியல் வன்முறை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம் பெற்றும் மனித சமூகத்திற்கே அவப்பெயரை தேடி கொடுத்து வருகின்றது. இவ்வாறு பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு உள்ளாகும் பெண்பிள்ளைகளும் மிகவும் சிறியவர்கள் என்பது மிகவும் மோசமான செய்தியாகும். அந்த வகையில் இந்தியாவை சர்வதேச ரீதியில் தலைகுனிய வைத்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் காலியாபசார் எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. 3 மிருகங்களாhல் குறித்த சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அப்பகுதியில் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் இடப்பட்டிருந்தாள். இந்த 3வர்களில் ஒருவர் சாமியார் என்றும் மற்றவர்கள் இருவரும் அவரின் நண்பர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சிறுமி காணாமல் போவதற்கு முன்னால் நேற்று முன்தினம் இந்த மூவர்களில் ஒருவருடன் இச்சிறுமி காணப்பட்டமையே மக்களின் கோபத்திற்கு காரணமாகும். இந்த நிலையில் இந்த கொடுரத்தை புரிந்த அந்த 3 மிருகங்கள் மீதும் அப்பகுதி மக்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சினம் மிக்க மக்களின் தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் இருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்று பதுன் உத்தர பிரதேசத்தில் இரட்டை சகோதரிகள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இதுபோன்றே மரத்தில் தூக்கிலடப்பட்ட சம்பவம் ஏற்கனவே பெரும் புள்ளிகளுடன் தொடர்பு பட்டுள்ளதால் அக்குற்ற வழக்கு மேற்கொண்டு நகர முடியாமல் உள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை கொடுத்துள்ள நிலையில் இந்த பாலியல் குற்றம் மக்களுக்கு மிகவும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் சினம் கொண்ட நிலையில் குறித்த குற்றவாளிகளை தாக்கி அவர்கள் வசித்த குடிசையையும் தீக்கு இரையாக்கியுள்ளனர். இது பற்றி கருத்து கூறிய காவல்துறையினர் இந்து மூவரும் தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தந்தையார் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டார் என்றும் தெரிவித்தார். மேலும் இச்சிறுமி கொல்லப்பட்டு தூக்கில் இடப்படுவதற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமைக்கு ஆதாரம் ஏதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தண்டனைகள் வலுவாக இருந்தால் குற்றங்கள் குறையும் என்பது வெளிப்படை உண்மை !!


No comments:

Post a Comment