கனடாவில் பிறந்த ஒரு குழந்தைக்கு இதுவரை உலகில் யாருக்கும் ஏற்படாத ஒருபுதுவிதமான குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தை சமீபத்தில் தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியது. ஆனால் அந்த குழந்தையால் வாயை திறக்க முடியாது என்பதுதான் கொடுமை. இதுவரை வாய்பேச முடியாத ஊமைக்குழந்தைகள் பிறப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இந்த குழந்தைக்கு வாயையே திறக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ஒட்டாவோ பகுதியை சேர்ந்த Andrew மற்றும் Amy என்ற தம்பதியினருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் Wyatt Scott என்ற ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையிடம் இருந்து அழுகை சத்தமே கேட்கவில்லை என்பதால் நர்ஸ் அந்த குழந்தையின் வாயில் விரலை உள்ளே நுழைக்க முயன்றார். அப்போது அந்த நர்ஸ் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் வாய் ஒட்டியே அந்த குழந்தை பிறந்துள்ளது. வாயை திறக்கவே முடியாத அந்த குழந்தையை அனைவரும் அதிசயமாக பார்த்தனர்.
கடந்த ஒருவருடமாக அந்த குழந்தைக்கு குழாய் மூலமாகவே உணவு கொடுத்து வருகின்றனர். இதற்கு என்ன தீர்வு, எப்படி இந்த குறையை சரிசெய்யலாம் என்று இன்னும் டாக்டர்களே முடிவு செய்யாததால் இந்த குழந்தைக்கு இன்னும் எத்தனை நாளைக்கு குழாய் மூலம் உணவு கொடுப்பது என்று தெரியவில்லை என்று இந்த குழந்தையின் பெற்ரோர் சோகமாக கூறுகின்றனர்.
இந்த குழந்தையின் பெற்றோர் கடந்த மாதம் WhatsWrongWithWyatt.com என்ற புதிய இணையதளத்தை தொடங்கி, தன்னுடைய குழந்தையை எப்படி குணப்படுத்தலாம் என்ற ஆலோசனை கேட்டு வருகின்றனர். இதுவரை அவருக்கு ஆலோசனைகள் கூறி 500 இற்கு மேற்பட்ட இமெயில்கள் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது.nine
nine1