Sunday, July 27, 2014

லண்டனில் பெனிபிற் : கோவாவில் உல்லாசம் : தற்போது சிறையில் : லண்டன் பெண்ணின் கைங்கர்யம்!




பிரித்தானியா டாட்மௌத் டெவனை சேர்ந்த கரேன் ரறன்ட் எனும் பெண் தன்னால் பிறரின் உதவியின்றி வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு சென்று வரமுடியாது என்றும் முன்பின் தெரியாத இடங்களுக்கும் செல்லமுடியாது என்று கூறி பெனிபிட் எடுத்து 130000 பவுண்ட்ஸ் மோசடி செய்தமையினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெனிபற் எடுத்த இவர் சுற்றுலா நோக்கில் இந்தியா கோவாவில் ஆறு மாதங்கள் வசித்து வந்தமை தெரியவந்துள்ளது.
51 வயதான இப்பெண் போததற்கு கோவாவில் அப்பாட்மென்ட் ஒன்றை வாங்கி தன்னை அழகு படுத்தும் நோக்கில் பிளாஸ்டிக் சந்திர சிகிச்சை செய்தமையும் தெரியவந்துள்ளது. இந்த சத்திர சிகிச்சையில் தொப்பை நீக்குதல், பல் வெண்மையாக்குதல் மற்றும் கைகளில் அதிகப்படியான தசைகளை நீக்குதல் போன்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் விடுமுறையை கழிக்கும் வகையில் குதிரைச்சவாரி செய்ததையும் புகைப்படத்துடன் தெரிய வந்துள்ளது.
பொது மக்கள் கொடுத்த தகவலினை கருத்தில் கொண்டு இதனை ஆராய்ந்து குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த தகவல்களை சேகரித்துள்ளனர். அவ்வளவு விடயங்களும் படங்களுடன் சாட்சியமாக்கப்பட்டுள்ளன. கோவாவில் அப்பாட்மென்ற் ஒன்றை விலைக்கு வாங்கி தனது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை வைத்தியருடன் இருக்கும் படம் கூட கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான கடந்த 13 வருட காலம் மாற்று வலவுள்ளோருக்கான உதவிக் கொடுப்பனவு எடுத்தமை, வருமானம் பெற்றமை மற்றும் வீட்டு உதவி பெற்றமை போன்ற மோசடி குற்றச்சாட்டுக்கு இலக்கான அவர் தற்போது 27 மாத சிறைவாசம் அநுபவித்துவருகின்றார்.
இத்தகைய குற்றங்களை புரிபவர்கள் அரசாங்கத்தை ஏமாற்றி பெற்ற பணத்தை மீள அளிக்கும் அதே பட்சத்தில் தகுந்த சிறைவாசமும் பெற்றுக்கொள்ளுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறு அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் என்று யார்மீதேனும் சந்தேசம் வந்தால் 0800 854440 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
 
  

No comments:

Post a Comment