கனடா- சீன சைபர் தாக்குதல் காரணமாக மத்திய அரசாங்கத்தின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் தனது கணனி சேவைகளை பணிநிறுத்தம் செய்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
சீன குறும்பர்கள்  தேசிய ஆராய்ச்சி கவுன்சில் கணனிகளை அடைய முயற்சி செய்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
குறும்பர்கள் கணனிகளில் உள்ள உணர்வு பூர்வமான தகவல்களை திருடுவதை தடுப்பது அவசியம் என்ற நோக்குடன் கணனிகளை முழுமையாக பணிநிறுத்தம் செய்ய திங்கள்கிழமைNRC தீர்மானித்தது.
இத்தாக்குதலின் முதன்மையான கவனம் NRC ஆக இருப்பதாக அறியப்பட்டாலும் ஆதாரங்கள் மூலம் பரந்த தாக்கங்கள் இருப்பதாக கருதப்படுகின்றது. ஏனெனில் அரசாங்கம் 43 திணைக்களங்களை ஒரு பகிரப்பட்ட தரவு சேவை அமைப்பிற்குள் மாற்றியுள்ளது என அறியப்படுகின்றது.
இந்த தேசிய ஆராய்ச்சி கவுன்சில் கனடாவின் உயர் மட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பாகும். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் ,விண்வெளி மற்றும் தொழில்துறை கண்டு பிடிப்புக்கள் ,மாற்றப்பட்ட உணவுகள் மற்றும் பல தொடர்பான ஆராய்ச்சிகளை இது கையாளுகின்றது.
கனடிய அரச கணனிகளை சீன சூறையாளர்கள் ஊடுருவல் செய்வது இது முதல் தடவை அல்ல என கூறப்பட்டுள்ளது. இவர்கள் முன்னர் திறை சேரி, நிதி துறை வாரியம், கனடா வங்கி போன்றனவற்றை மட்டுமன்றி பாராளுமன்ற ஹில்லையும் இலக்கு வைத்தனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
யு.எஸ்சும் சீன கணனி மற்றும் தரவு சூறையாளர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.