Wednesday, July 23, 2014

இரவோடு இரவாகவே கிளாஸ்கோ சென்று அரங்கத்துக்கு வெளியே காத்து நிற்கும் தமிழர்கள் !


இன்றைய தினம் (23) கிளாஸ்கோ நகரில் காமன் வெலத் நாடுகளின் விளையாட்டு போட்டி ஆரம்பமாக உள்ளது. ஆனால் 22ம் திகதி இரவே தமிழர்கள் அங்கே சென்று அரங்கிற்கு வெளியே நின்று அவ்விடத்தை நோட்டமிட ஆரம்பித்து விட்டார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று (23) அதிகாலை 6.00 மணிக்கு லண்டனில் இருந்து பல பேரூந்துகள் தமிழர்களை தாங்கிக்கொண்டு கிளாஸ்கோ நகருக்கு செல்ல ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே பல தமிழர்கள் அங்கே சென்றுவிட்டார்கள். மகிந்தர் காமன் வெலத் நாடுகளின் தவிசாளர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். இன்று நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் அவருக்கு பிரதம விருந்தினர் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவருக்காக ஒரு நாற்காலி மகாராணிக்கு அருகாமையில் போடப்பட்டும் உள்ளது.
ஆனால் இதுவரை இலங்கை அரசு மகிந்தரின் பிரித்தானிய வருகை தொடர்பாக மெளனம் சாதித்து வருகிறது. மகிந்தர் கிளாஸ்கோவுக்கு வராது போனால் அது நிச்சயம் தமிழர்களின் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற காரணமாக தான் இருக்குமே தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது. இதேவேளை அவர் கிளாஸ்கோ வந்தாலும் அவரை வடிவாக வரவேற்க்க தமிழர்கள் தயாராகத் தான் உள்ளார்கள். எப்படி பார்த்தாலும் இப்போராட்டம் பெரும் வெற்றியை தமிழர்களுக்கு ஈட்டித்தரவுள்ளது. பிரித்தானிய தமிழர்கள் என்றால் மகிந்தருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள் என்ற பெயரை எந்த வரலாறும் அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாது. 

No comments:

Post a Comment