Tuesday, July 29, 2014

கொழுத்தும் வெய்யிலில் காரில் பிள்ளையை விட்டு,ஷாப்பிங் செல்லும் பிரிட்டன் தாய்மார்கள்: பொலிசார் கண்ணாடியை உடைக்கிறார்கள் !


பிரிட்டனின் ஸ்வான்சியா மாகாணத்தில் உள்ள ஸ்பார்க் மோர்பா என்னும் ஷாப்பிங் சென்டர்க்கு கடந்த 17ம் தேதி ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் தன்னுடைய 10 மாதக் குழந்தையை காரிலேயே விட்டு விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரிட்டனில் கடுமையான வெயில் காலம் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் அப் பெண் தன்னுடைய குழந்தையை காரில் விட்டு சென்று விட்டு ஷாப்பிங் சென்றுள்ளார்,
அங்கே ஷாப்பிங் செய்ய வந்த ஒரு சிலர் காரில் உள்ள குழந்தையை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், உடனே போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அக்குழந்தையை மீட்டுள்ளனர். அக்குழந்தை காரில் இருக்கும் போது பிரிட்டனின் தட்ப வெப்ப நிலை 25டிகிரி அளவுக்கு கடுமையான வெயில் நிலவியது குறிப்பிடத்தக்கது. பொலிசார் தெரிவிக்கையில் கேக் பேக் செய்யும் அவனில் ஒரு குழந்தையை வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல காரினுள் வெப்பம் இருந்ததாக தெரிவித்துள்ளார்கள். காரில் பிள்ளைகளை விட்டுச் செல்வது கொலை முயற்சிக்கு ஈடான செயல் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment