Saturday, July 26, 2014

சிரிய சிறையில் வாடும் பிரித்தானிய இரட்டை கிளிகள் : அதிர்ச்சி சம்பவம்.

சிரியாவில் போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்த புனித போரை நடத்துவதற்கும் இஸ்லாமிய இராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவதற்கும் முஸ்விம்கள் விரும்பியுள்ளனர். இந்த நிலையில் பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்த முஸ்லிம்கள் சிலர் சிரியாவுக்கு சென்று அவ்வமைப்பில் இணைந்தமை பற்றி அவ்வப்போது அதிர்வு செய்திகள் வெளியிட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் அதேபோன்று அவ்வமைப்பில் இணைந்து கொள்ள விரும்பி பிரித்தானியா மான்செச்டரில் வசித்து வந்த 16 வயதான பாடசாலை இரட்டை சகோதரிகளான சல்மா மற்றும் சஹ்றா ஆகிய இருவரும் சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து போரிடவே விரும்பியிருந்தனர். அவ்வாறு சென்ற வேளையில் ஆரம்பத்தில் சுடுகலன்கள் பற்றி பயிற்சி எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்த தகவலை சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாகவே தெரிவித்துள்ளனர்.
இவ்விருவர்களில் ஒருவர் அங்கு ஆப்கானை பிறப்பிடமாக கொண்ட பிரித்தானியர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். அது மட்டும் அல்லாமல் போராளிகளை திருமணம் செய்துள்ளதால் தனது விருப்பப்படி வெளியில் எங்கும் சென்று வர முடியாது என்றும் வீட்டில் உள்ள வேளைகளில் புனித-குர்-ஆனையே படித்துக்கொண்டிருக்க வேண்டிள்ளதாகவும் தெரியவந்துள்ளனர்.
மேலும் அவர்களது போராளி கணவர்கள் வெளியில் அழைத்து சென்றாலே வெளியில் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவில் படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு வைத்தியராக வரவிரும்பியே கற்கை நெறியை தொடர்ந்ததாக இவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பாக கற்றை நெறிகளை கற்று வந்த இச்சிறுமிகள் கடந்த மாதம் நடு இரவில் பெற்றோரை விட்டு விட்டு துருக்கி செல்வதற்கு விமானம் எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த காவல்துறையினர் இவர்களது சகோதரன் ஒருவன் ஏற்கனவே அவ்வமைப்பில் உள்ளதாகவும் அவ்வாறு அவர்களும் அவ்வமைப்பில் இணைந்து கொள்ளவும் பயணித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் விசாரணை மேற்கொண்டதில் சிரியாவில் போராடும் ஒருவர் தான் 16 வயது பெண்களுக்கு போர் பயிற்சி வழங்குவதாக சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாக பொய் சொல்லி இருந்ததாகவும் அதன் பின்னர் இவர்களும் அவ்வாறு துப்பாக்கிகளை கையாள ஆசை கொண்டு இணைந்தமை போன்று தெரிவதாகவும் அறிய முடிகின்றது.
மேலும் இற்றைவரை 1500க்கும் அதிகமான பிரித்தானியர்கள் சிரியாவில் போராட சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    

No comments:

Post a Comment