Monday, July 28, 2014

குறிவைக்கப்படும் ராகுலின் வலதுகரம் !


ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்கிவரும் முக்கிய வலது கை யார் என்று கேட்டால், அது மதுசூதன் மிஸ்த்ரி என்று சிறுபிள்ளையும் சொல்லிவிடும். இவர் ஈழத் தமிழர் எதிர்ப்பு வாதியும் கூட. ஈழத் தமிழர்களுக்கு எதிரான முடிவுகளை சோனியா குடும்பம் தொடர்ந்து எடுக்க இவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. ஆனால் இவர் நேரம் இப்போது சரியில்லை. சொந்த கட்சிக்கு உள்ளேயே இவருக்கு பலத்த எதிர்பு கிளம்பியுள்ளது. என்ன தான் நடக்கிறது ?
அசாம், அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை அடுத்து, குஜராத் மாநில காங்கிரசுக்குள்ளும் குழப்பம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு நெருக்கமானவரான மதுசூதன் மிஸ்த்ரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத தோல்வி:லோக்சபா தேர்தலில், வரலாறு காணாத தோல்வியை, காங்கிரஸ் சந்தித்துள்ளது. இந்த தோல்வியில் இருந்து, காங்கிரஸ் மேலிடத்தால், இன்னும் மீள முடியவில்லை.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிருப்தி குரல்கள், பகிரங்கமாக வெடித்துள்ளன.அசாம், மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தற்போது குஜராத் மாநில காங்கிரசிலும் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.வகேலா போன்ற மூத்த தலைவர்கள் பலர் குஜராத் காங்கிரசில் இருந்தாலும், சமீபகால செல்வாக்கு மிக்க தலைவராக, மதுசூதன் மிஸ்த்ரி உருவெடுத்துள்ளார்.இவர், காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுலுக்கு, மிகவும் நெருக்கமானவர். தேர்தலுக்கு முன்வரை, இவர்தான், ராகுலின் செல்வாக்கு பெற்ற, அதிகாரம் மிக்க நபராக வலம் வந்தார்.
இவரின் தலைமையில் தான் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டன. குஜராத் மாநிலம், வதோதரா தொகுதியில், நரேந்திர மோடியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளராக, மதுசூதன் மிஸ்த்ரியை வேட்பாளராக்கினார், ராகுல்.இவ்வளவு செல்வாக்கு பெற்றிருந்த மதுசூதன் மிஸ்த்ரி, தேர்தல் தோல்விக்கு பின், இப்போது, கட்சியின் அதிருப்தி கோஷ்டியால் குறிவைக்கப்பட்டுள்ளார். 'சமீபத்தில், வதோதராவில் நடந்த, காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுலும் கலந்து கொண்டார். அப்போது, அவர் முன்னிலையிலேயே, அனைவரும், மதுசூதன் மிஸ்த்ரியை விமர்சித்தனர். இது, ராகுலுக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உ.பி.,யிலும் எதிர்ப்பு: மேலும், மதுசூதன் மிஸ்த்ரி, குஜராத்திற்கு வரும்போதெல்லாம், காங்கிரஸ் நிர்வாகிகளால், முற்றுகையிடப்படுகிறார். உ.பி., மாநிலத்திலும், இவருக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.மதுசூதன் மிஸ்த்ரிக்கு எதிராக கிளம்பியுள்ள அதிருப்தி குரல்கள், இன்னும் பல மாநிலங்களுக்கும் பரவும், வாய்ப்பு உள்ளதால், காங்., மேலிடமும், ராகுலும் கவலை அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment