Thursday, July 31, 2014

பல உயிர் வாழ்வதற்கு தன் உயிரை தியாகம் செய்த சிறுவன்: தலைவணங்கிய டாக்டர்கள் கண்ணீர் சிந்தினர் !


சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்று இறந்தவுடன் அந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சிறுவனது இறந்த உடலுக்கு முன் நின்று தலை வணங்கினர். குறித்த சிறுவன் இறப்பதற்கு முன் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானமாக கொடுத்து அதன்மூலம் பல உயிர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்தமையினாலேயே டாக்டர்கள் தலைவணங்கி மரியாதை செய்துள்ளனர்.
சீனாவில் உள்ள சென்லேன் என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லியாங் யாவோயி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த ஜூன மாதம் 6ஆம் திகதி அனுமதிக்கப்பட்டான். அவனுடைய உடல் நிலையை ஆய்வு செய்த டாக்டர்கள், நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும், சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டனர். இதையறிந்த சிறுவன், தனது பெற்றோர்களிடமும், டாக்டர்களிடம் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானம் செய்ய முன்வருவதாக கூறினான்.
தான் இந்த பூமியில் நீண்ட நாட்கள் வாழ விரும்பியதாகவும், தன்னுடைய உயிர் போனாலும் தன் உடலில் உள்ள பாகங்கள் பிறருடைய உடலில் பொருத்துவதால் தான் நீண்ட காலம் நிம்மதியாக வாழ்வேன் என்றும் கூறியுள்ளான்.தான் எதிர்காலத்தில் ஒரு டாக்டராக மாற விரும்பியதாகவும், அதனால் தன்னுடைய உடல் பாகங்களை மருத்துவ கல்வி கற்கும் மாணவர்கள் யாருக்காவது தேவைப்பட்டால் அவர்களுக்கு பொருத்தி தனது ஆசையை பூர்த்தி செய்யும்படியும் கேட்டுக்கொண்டான்.
சிறுவனின் கண்கள், இதயம், கிட்னி உள்பட முக்கிய பாகங்கள் அனைத்தும் எட்டு மணி நேர அறுவை சிகிச்சையில் எடுக்கப்பட்டு அந்த பாகங்கள் அனைத்தும் அவனுடைய விருப்பப்படி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பொருத்தப்பட்டது. அவன் இறந்த பின்னர் அவனுடைய இறந்த உடலுக்கு முன்னர் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து டாக்டர்களும் தலைவணங்கி அந்த சிறுவனின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment