Wednesday, July 30, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரை அடையாளம் காட்டும் மறுபக்கம் - காட்சிகள் அதிர்ச்சியானவை.

சிரியா மற்றும் ஈராக்கில் தனி இஸ்லாம் நாட்டுக்காக போராடிவரும் முஸ்லிம் அமைப்பினர் தங்கள் போராட்டத்தின் பல்வேறு அம்சங்களான தற்கொலை குண்டு தாக்குதல், கைதிகளை புழுதி மண்ணில் குப்புற படுக்க வைத்து ஒவ்வொருவராக கொலை செய்தல், துப்பாக்கி சூடுகள் மற்றும் இது போன் ஏனைய செயற்பாடுகள் அடங்கிய ஒரு தொகுதி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அவை அனைத்தும் பார்ப்பதற்கு மனதை நெருடுபவையாக உள்ளன. இந்த காட்சிகள் அனைத்தும் உலகின் முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடிய ரம்ழான் தினத்தன்று வெளிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக முஸ்லிம்கள் அல்லாஹ்- அக்பரின் பெயரால் ரம்ழான் கொண்டாடிக்கொண்டு இருக்கையில் ஈராக்கில் இதே அல்லாஹ்- அக்பரின் பெயரால் இவ்வமைப்பினர் இந்த தாக்குதல்களையும் படுகொலைகளையும் செய்து காட்சிகளை வெளியிட்டுள்ளமை உலகத்தினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கைது செய்யப்பட்ட வாலிபர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி புறநகர் பகுதிக்கு அழைத்து சென்று அனைவரையும் குப்புற படுக்க வைத்து ஒவ்வொருவராக சுட்டுகொல்லும் காட்சிகள் மேலம் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இன்னொரு காட்சியில் தான் வெடித்து சிதறப்போவதனை ஒரு போராளி கூறிச் செல்கின்றார்.
அவர் வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது அவர் குறித்த கட்டடத்தை வெடிக்கை வைப்பதற்கு முன்னர் அவரை நோக்கி எதிர் அணியினர் சரமாரியாக சூட்டினை மேற்கொள்ளுவதும் கேட்க முடிகின்றது. தவிர அவ்வாலிபருக்கு அருகில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும் அவர்களின் தீவிர தயார் படுத்தலை காட்டிநிற்கின்றது. அனைத்து காட்சிகளும் அவர்கள் வெளியிட்டுள்ள 36 நிமிட தொடர் கானொலியில் காட்டப்படுகின்றன. வாகனங்களில் அழைத்து செல்லப்படும் வாலிபர்கள் அனைவருமே மிகவும் நெருக்கமாக ஏற்றப்பட்டு அழைத்துச்செல்லப்படுகின்றனர். இவர்களில் எவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் ஈராக்கி இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்த படுகொலைகள் அனைத்தும் சதாம் ஹசைனின் கிராமமான ரிக்றிட்டில் இடம்பெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இன்னொரு காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்படுவதற்கு காத்திருக்கின்றனர். இன்னொரு காட்சியில் இவ்வமைப்பினர் குறிபார்த்துசுடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இவ்வாறு தெளிவாக காட்டும் காட்சிகளில் எதுவித மனிதாபிமானமும் இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
 
 
 
  
 

No comments:

Post a Comment