Saturday, July 26, 2014

கையில் தெரியும் கடிகாரம்: தொழில் நுட்ப்ப வளர்சியின் உச்சக்கட்டத்தில் தான் நாம் இருக்கிறோம் !

முதலில் கைக் கடிகாரங்கள் வந்தது. பின்னர் டிஜிடல் கைக்கடிகாரங்கள் வந்தது. தற்போது அதனையும் தாண்டி புதிய கைக்கடிகாரங்கள் வரத்தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக்கில் வரும் கைக்கடிகாரங்களை காட்டிலும் கைகளிலேயே நேரத்தை பார்க்க கூடிய கடிகாரங்கள் மார்கெட்டுக்கு வர ஆரம்பித்துள்ளது. இந்த வகையான கடிகாரங்களில் உள்ள லைட் ஒரு புரொஜெக்டர் போல வேலைசெய்யுமாம். நேரத்தை அது உங்கள் கைகளிலேயே தெளிவாக காட்டி விடும். எந்த அலவு வெளிச்சம் இருக்கிறது என்று பார்த்து அதற்கு தகுந்தால் போல, தனது ஒளியின் திறணை அது கூட்டிக் குறைக்க வல்லதாம்.

அதுமட்டும் அல்ல. உங்கள் மோபைல் போனுடன் அதனை நீங்கள் பு-ளூ ரூத் மூலம் கனெக்ட் செய்தால். உங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ் ஐயும் அது உங்கள் கைகளில் காட்டிவிடும். அதனால் நீங்கள் போனை எடுத்து பாஸ்வேட்டை அழுத்தி, பின்னர் மெசேஜ் சென்று தான் வாசிக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். பொதுவாக கார் ஓடும்போதும், பிறவேலைகளில் ஈடுபடும்போதும், இதுபோன்ற கைக்கடிகாரங்கள் பெரிதும் உதவியாக இருக்கிறது என்கிறார்கள்.


No comments:

Post a Comment