Thursday, July 24, 2014

பேட்மான் வடிவில் பனிப்பாறை! வியப்பூட்டும் அதிசயம் (வீடியோ இணைப்பு)

கனடாவில் பேட்மேன் வடிவில் தோன்றியுள்ள பனிப்பாறை மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் நியூபவுண்லாண்ட் நகரில், Round Lake, Ontario என்ற பகுதியில் தோன்றிய பனிப்பாறை பார்ப்பதற்கு பேட்மேன் போலவே தத்ரூபமாக உள்ளது.
இந்த பேட்மேன் பனிப்பாறையை பார்க்க கூட்டம் கூட்டமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருவதாக கூறப்படுகிறது.
இதனை முதன்முதலில் பார்த்த மைக் பார்சன் என்ற நபர்,இதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவை நூற்றுக்கணக்கானோர் லைக் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற அதிசயமான பல புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் மைக் பார்சன் ஏற்கனவே பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment