Wednesday, July 23, 2014

மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி திறக்கப்பட்டதா ? பிரித்தானியா ஆராயும் என்கிறார் டேவிட் கமரூன் !


கடந்த வியாழன் அன்று கிழக்கு உக்கிரேனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை, கிளர்சியாளர்கள் கொண்டு சென்று இருந்தார்கள். பின்னர் அவர்கள் சுமார் 5 தினங்கள் கழித்தே கறுப்பு பெட்டியை நேற்றைய தினம்(22) மலேசிய அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்கள். விமானத்தில் உள்ள விமானி தரைக் கட்டுப்பாட்டு தளத்துடன் பேசும் அனைத்து விடையங்களும் இதில் பதிவாகி இருக்கும். ஆனால் இதனை சுமார் 5 நாட்கள் வைத்திருந்த கிளர்சியாளர்கள், அதனை ரஷ்யாவிடம் கொடுத்து ஹக் செய்து இருக்கலாம் என்றும், மேலும் அதில் உள்ள டேட்டாக்களை சிலவற்றை அழித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இதனை முறியடிக்க பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் முன்வந்துள்ளார். மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை ஹம்பஷியரில் உள்ள தமது பரிசோதனை நிலையம் பரிசோதிக்கும் என்று அவர் உறுதி வழங்கியுள்ளார். பிரித்தானியாவின் ஹம்பஷியர் மாநிலத்தில் அதி நவீன வசதிகள் கொண்ட விமான ஆராட்சி நிலையம் ஒன்று உள்ளது. இதில் கறுப்பு பெட்டிகளை பரிசோதிக்க முடியும். இதனூடாக மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை பரிசோதித்து அறிக்கை ஒன்றை வழங்கவுள்ளதாக பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள், ரிவீட்டர் சமூக வலையத் தளம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதனூடாக ரஷ்யா ஏதாவது சித்து விளையாட்டு காட்டியுள்ளதா என்று அம்பலமாகிவிடும் என்கிறார்கள். இதேவேளை நேற்றைய தினம்(22) தனது பாதுகாப்பு சபையை கூட்டிய புட்டின் அவர்கள் நடந்த விபரீதம் தொடர்பாக ரகசியமாக ஆராய்ந்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. தனது செல்வாக்கை பாவித்து கிளர்சியாளர்களை விசாரணைக்கு ஒத்துக்கொள்ள வைக்க தன்னால் முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால் உலகளாவிய ரீதியில் ரஷ்யா மேல் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அன் நாடு எவ்வாறு தவிர்க்கும் என்பது தான் பெரும் விடையமாக உள்ளது.


No comments:

Post a Comment