இலங்கையில் வல்வெட்டித்துறையை சேர்ந்த ரமேஷ் தனலஷ்மி தம்பதிகளின் புதல்வன் குறிஞ்சிகன் பிரித்தானியாவில்Beecholmeஆரம்ப பாடசாலையில் 4-ம் ஆண்டில் கல்வி பயில்கின்றான். இவனுக்கு வயது 9.
பிரித்தானிய எரிவாயு நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு பாடசாலைகளிற்கிடையில் நடாத்தப்பட்ட பசுமை பேணல் என்ற தலைப்பில் பசுமை வீடு வடிவமைத்தல், வீடு கட்டுதல் போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு திறமை மிக்க தனது சிந்தனை மூலம் வீடொன்றின் உள்ளக மற்றும் வெளிப்புற அமைப்புக்களை வடிவமைத்தான்.
இவனது சாதனையால் பாடசாலை முதலாவது இடத்தை பெற்றதோடு 1-வது பரிசாக 150,000-பவுன்ஸ்களையும் பெற்றுள்ளான்.
இளைஞர்களிடையே எரிவாயு சேமிப்பு மற்றும் பசுமை பேணல் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்துள்ளது.
இப்போடடியில் 500-ற்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு கொண்டன. ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் நூற்றிற்கும் அதிகமான மாணவர்கள் பங்கு பற்றினர். கிட்டத்தட்ட 5-இலட்சங்களிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்ட இந்த போட்டியில் முதற்சுற்றில் ஆறு பேர்கள் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் குறிஞ்சிகன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டான்.
இவனது சாதனையை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களும் பெருமையுடன் பாராட்டினர்.
தமிழ் சமூகமும் குறிஞ்சிகனை பாராட்டி வாழ்த்தியது.
tamil