Thursday, July 24, 2014

லண்டனில் திடீரென காணமல் போன 2 சிறுவர்கள்: பீதியில் உறைந்துள்ள பல பெற்றோர்கள் !


பிரித்தானியாவின் பேர்மிங்காம் நகரில் வீதியில் விளையாடிக்கொண்டு இருந்த இரு சிறுவர்களை காணவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளார்கள். தற்போது பிரித்தானியாவில் பள்ளிவிடுமுறை காலம் என்பதனால், பல பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே சென்று வீதிகளில் அல்லது அருகில் உள்ள பூங்காவில் விளையாடுவது வழக்கம். இவ்வாறு நேற்றைய தினம்(23) மாலை விளையாடிக்கொண்டு இருந்த 2பிள்ளைகளை காணவில்லை என்று பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார்கள். 11 வயதாகும் சிறுமியும் 4 வயதாகும் அவரது இளைய சகோதரருமே இவ்வாறு திடீரென காணமல் போயுள்ளார்கள். இச் சம்பவம் பல பெற்றோரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு தற்போது அதிகரித்துள்ளது.
வீதிகளில் விளையாடும் சிறுமிகளை பிடித்துச் சென்று கற்பழிப்பது. அவர்களை எவ்வித காரணமும் இன்றி கொலைசெய்வது போன்ற குற்றச்செயல்கள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சில மண்டை தட்டிய மனிதர்கள் இவ்வாறு சிறுவர்களையும் சிறுகிகளையும் கடத்தி கொலைசெய்தும் வருகிறார்கள். இவர்களைப் போன்ற கொலையாளிகள், பொலிசாரிடம் அவ்வளவு எளிதில் அகப்படுவதும் இல்லை. இவர்கள் போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடும் இந்த இடத்தில் தான் எமது பிள்ளைகளும் விளையாடுகிறார்கள் ? என்று பல பெற்றோர் எண்ணி கவலையடைந்துள்ளார்கள். லண்டனில் உள்ள தமிழர்களும் தமது பிள்ளைகள் மேல் ஒரு கண் வைத்திருத்தல் நல்லது. வெளியே சென்று விளையாட என்று கேட்டால் நீங்களூம் கூடவே செல்வது நல்லது.
எப்பொழுதும் உங்கள் கண்காணிப்பில் அவர்கள் இருப்பது நல்லது. சுமார் 16 அல்லது 17 வயதுக்கு பின்னரே அவர்கள் தனியாகச் செல்லும் தகுதியைப் பெறுகிறர்கள் என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்.

No comments:

Post a Comment