கிழக்கு உக்­ரே­னிய பிராந்­தி­யத்தில் வெடித்துச் சிதறி வீழ்ந்த மலே­சிய எம்.எச். 17 விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது சட­லங்கள் நெதர்­லாந்­துக்கு விமா­னத்தில் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளன.
அங்கு அந்த சட­லங்­களை அடை­யாளம் காண்­ப­தற்­கான பிரேத பரி­சோ­த­னைகள் முன்னெ­டுக்­கப்­படவுள்ளன. மலே­சிய விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்த 298 பேரில் 193 பேர் நெதர்­லாந்து பிரஜை­க­ளாவர்.
இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் முக­மாக நெதர்­லாந்தில் ஒரு நாள் தேசிய துக்க தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களில் 200 பேரின் சட­லங்­களே மீட்­கப்­பட்­டுள்­ளன.
மேற்­படி விமானம் சிதறி வீழ்ந்த தளத்தை சுற்­றிய பகு­தியை தமது கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­துள்ள ரஷ்ய ஆத­ரவு கிளர்ச்­சி­யா­ளர்கள் சட­லங்­களை ஒப்­ப­டைப்­பதை தாம­தப்­ப­டுத்­து­வ­துடன் ஆதா­ரங்­களை மாற்­றி­வ­ரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
விமான அனர்த்தம் இடம்­பெற்று 4 நாட்­களின் பின் சுமார் 200 சட­லங்­க­ளுடன் குளி­ரூட்­டப்­பட்ட புகை­யி­ரதம் உக்­ரே­னிய அர­சாங்கக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கார்கிவ் நகரை செவ்­வாய்க்­கி­ழமை வந்­த­டைந்­தது.இத­னை­ய­டுத்து புதன்­கி­ழமை காலை அவற்றில் 40 சவப்­பெட்­டிகள் கார்கிவ் விமான நிலை­யத்­தி­லி­ருந்த இரு இரா­ணுவ விமா­னங்­களில் ஏற்­றப்­பட்­டன.
இதன்­போது, அந்த விமான நிலை­யத்தில் தூது­வர்­களும், அதி­கா­ரி­களும், படை­வீ­ரர்­களும் கூடி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.நெதர்­லாந்தின் எயின்­ஹோவன் விமான நிலை­யத்தை புதன்­கி­ழமை மாலை முத­லாவது விமானம் வந்­த­டைந்­துள்­ளது.
இதன்­போது, அந்த விமான நிலை­யத்தில் நெதர்­லாந்து பிர­தமர் மார்க் ருத்தும் அந்­நாட்டு அரச குடும்­பத்­தி­னரும் சமு­க­ம­ளித்­தி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.தொடர்ந்து சடலங்கள் ஆளடையாளம் காண்பதற்காக ஹில்வெர்ஸம் பிராந்தியத்தின் தெற்கேயுள்ள கொர்பொரல்வான் அவுட்ஹெயுஸ்டனுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
சடலங்களை அடையாளங் காணும் செயற்கிரமம் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என பிரதமர் மார்க் ருத் தெரிவித்தார்.
அதே­ச­மயம் ரஷ்ய ஆட்சி கிளர்ச்­சி­யா­ளர்­களால் மலே­சிய அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட விமா­னத்தின் கறுப்பு பெட்டி தரவு உப­க­ர­ணங்கள் பிரித்­தா­னி­யா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன.
அவை பார்ன்­ப­ரோ­வி­லுள்ள விமான விபத்­துக்கள் தலை­மை­ய­கத்தில் பரி­சோ­திக்­கப்­படவுள்ளன. மலே­சிய விமானம் சுட்டு வீழ்த்­தப்­ப­டு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வாக்­கப்­பட்­டதில் ரஷ்யா பொறுப்­பாக இருந்த போதும் அந்த விமான அனர்த்­தத்தில் ரஷ்ய அர­சாங்கம் நேர­டியாக தொடர்பு பட்­ட­தற்­கான சான்று எதுவும் இல்லை என அமெ­ரிக்க சிரேஷ்ட புல­னாய்வு அதி­கா­ரிகள் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.
அமெ­ரிக்க தேசிய புல­னாய்வு பணிப்­பாளர் அலு­வ­ல­கத்தை சேர்ந்த அதி­கா­ரிகள் அந்த விமானம் கிழக்கு உக்­ரேனில் உள்ள கிளர்ச்­சி­யா­ளர்­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தற்­கான சான்­று­களை சமர்­பித்­துள்­ளனர்.
ரஷ்­யாவின் உத­வி­யுடன் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையின் கீழ் கிழக்கு உக்­ரேனில் இருந்து ஏவப்­பட்ட எஸ். ஏ.11 ஏவு­கணை ஒன்றின் மூலமே அந்த விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தாக பெயரை வெளி­யிட விரும்­பாத அந்த அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.
NatrlaintuNatrlaintu-01Natrlaintu-02