16-வயதுடைய பெண் ஒருவர் 75-கிலோமீற்றர் லேக் எரியை நீந்தி தனது நீச்சல் சாதனையை முடித்துள்ளார்.
Annaleise Carr  என்ற இப்பெண் அவரது நீச்சல் பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகளிடமிருந்து ஆலொசனை பெற்ற பின்னர் தனது நீச்சலை திட்டமிட்டதற்கு சறிது முன்னராகவே முடித்துக் கொண்டார். தனது நீச்சலின் மூலம் 130,000-டொலர்களை திரட்டியுள்ளார். இந்த நிதி ஒரு குழந்தை பருவ புற்று நோய் மையமான Camp Trillium- ற்காக திரட்டப்பட்டது.
Walsh, Ont.  என்ற இடத்தைச் சேர்ந்த இவர் தனது 14-வது வயதில் லேக் ஒன்ராறியோவிற்கு ஊடாக நீந்தி முதலாவது இளம் நீச்சலாளர் என்ற பெயர் பெற்றவர்.
teen teen3TEEN1
teen2