நேற்று முன் தினம் அல்ஜீரியா நாட்டு விமானம் மாலியில் விழுந்து நொறுங்கிய விபத்தில் சுமார் 116 பேரில்
“யாரும் பிழைக்கவில்லை” என
கூறப்படுகிறது. இதில் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் 11 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஜீரியா விமானத்தில் சென்று பலியான 11 பேர்களில் ஐந்து பேர் கனடாவை சேர்ந்தவர்கள் என்றும் மீதி ஆறு பேர் கனடாவில் நிரந்தரமாக வாழ்வதற்கு அனுமதி பெற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.
பலியானவர்களில் கனடாவை சேர்ந்த Winmalo Somda, அவருடைய மனைவி Angelique Kpoda மற்றும் இந்த தம்பதிகளின் குழந்தைகள் Nathanael, Arielle, ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது பரிதாபத்துக்குரியது. மேலும் இந்த விபத்தில் Wilfried Somda, Winmalo அவர்களின் சகோதரர் ஆகியோர்களும் பலியாகியுள்ளனர்.
அல்ஜீரியா விபத்தில் பலியான 11 பேர்களின் குடும்பத்திற்கும் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் இரங்கல் தெரிவித்துள்ளார்.plane_002