Saturday, June 28, 2014

லண்டனில் லொறி ஓட்டும் சாரதிகள் செய்யும் அபார வேலைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது


பிரித்தானியாவின் சாலைகளில் தமது இஷ்டப்படி வாகனங்களை ஓட்டித் திரியும் பொறுப்பற்ற நபர்களாக இருப்பவர்கள், இந்த பாரிய கொள்கலன்களை ஓட்டும் சாரதிகளாக தான் இருக்க முடியும். மோட்டர் வே என்றாலும் சரி, உள்ளூர் சாலைகள் என்றாலும் சரி, இவர்களின் அட்டகாசத்தை தாங்க முடியாது. பொதுவாக இவர்கள் ஒரு லேனின் இருந்து மற்ற லேனுக்கு செல்லும் போது அருகில் வரும் காரை மதிக்கவே மாட்டார்கள். தமது இஷ்டப்படியே ஓட்டுவார்கள். வேகத்தை குறைக்கும் பழக்கம் இவர்களிடம் இல்லை. குறித்த ஒரு வேகத்திலேயே ஓட்டிச் செல்வார்கள். முன்னா போகும் வாகனம் சிலவேளை மெதுவாக சென்றால், உடனே வலது கைப்பக்கமாக அதனை உடனே முந்திச் செல்வார்கள். அருகில் வரும் வாகனத்தை பார்க மாட்டார்கள். இதனை நம்மில் பலர் அறிந்திருப்போம்.
இதேவேளை இவ்வாறு பாரிய கொள்கலன்களை ஓட்டும் வாகன சாரதிகள், தமது வாகனத்தின் உயரத்தை அறிந்துவைத்திருப்பது மிகக் குறைவாகவே உள்ளது. லண்டன் மற்றும் அதனை சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் பல பாலங்கள் இருக்கிறது. இவற்றின் உயரம் என்ன என்பது தொடர்பான எச்சரிக்கை அறிக்கையை அவர்கள் பாலம் வருவதற்கு முன்னதாகவே வீதியில் எழுதி இருப்பார்கள். ஆனால் தமது வாகனத்தின் உயரம் என்ன என்று தெரியாமல், இதுபோன்ற பார ஊர்த்தி சாரதிகள் அப்படியே கவனிக்காமல் சென்று பாலத்தோடு மோதுகிறார்கள். இதனால் பாலத்திற்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. அத்தோடு மட்டும் இந்தப் பிரச்சனை முடிவடைவது இல்லை.
பாலம் பாதுகாப்பாக உள்ளதா என்று எஞ்சினியர்கள் வந்து பார்த்து ஆராட்சி செய்து ஓகே சொல்லும் வரை, அதன் மீது ரயில் ஓடாது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிப்படைகிறார்கள்.


No comments:

Post a Comment