Tuesday, June 24, 2014

ஒசாமா பின்லேடனின் கடைசிக் கடிதம்: பரபரப்பு தகவல்

சர்வதேச பயங்கரவாதியாக கருதப்பட்ட ஒசாமா பின்லேடன் கடைசியாக எழுதிய கடிதம் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன், அமெரிக்காவின் படையினரால் மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒசாமாவின் மரணத்திற்கு பின் அவர் பதுங்கி இருந்த வீடு அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வீட்டை முழுமையாக ஆய்வு செய்து வரும் அமெரிக்க படைகள் ஒசாமாவின் கடைசி கடிதத்தை கைப்பற்றி, வெளியிட்டுள்ளது.
அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, அல்குவைதா இயக்கம் பொதுமக்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் மக்களிடையே இயக்கத்தின் மீதான நன்மதிப்பை இழந்து வருகிறது; இழந்த நற்பெயரை மீட்கவும், இயக்கத்திற்காக வருமானத்தை பெருக்குவதற்காகவும், அல்குவைதா இயக்கத்தின் மீதான அமெரிக்க படைகளின் கவனத்தை திசை திருப்புவதற்‌காகவும் இயக்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்.
அதற்காக பிளாக்வாட்டர்,வால்யு ஜெட், பிலிப் மோரீஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களை ஒன்றை தேர்வு பரிசீலிக்க வேண்டும் என்று அக்கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment