Friday, June 27, 2014

றீலோட் செய்ய வரும் பெண்களோடு சல்லாபம்: அண்ணாவால் நையப்புடையப்பட்ட யாழ் உத்தியோகத்தர் !

மானிப்பாய்ப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயத்தைப் பார்த்த மருத்துவர் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அவதானித்து பொலிசாரிடம் தெரிவிக்க முற்பட்ட போது இளைஞர் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது. சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர்குழு ஒன்று குறித்த இளைஞனை பொலிசாரிடம் நாங்கள் அடித்ததாகத் சொல்லக்கூடாது என அவனை அச்சுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் வைத்தியர் அவர்களை விசாரித்த போதே அவர்கள் அவ் இளைஞனுக்கு ஏன் அடித்தது என வைத்தியருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியர் எனவும் அத்துடன் மானிப்பாய்க்கு சற்றுத் தொலைவில் உள்ள இடமொன்றில் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று நடாத்தி வருபவர் எனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான குறித்த நபர் தொலைத் தொடர்பு நிலையத்திற்கு றீலோட் செய்ய வரும் பெண்களின் இலக்கங்களை எடுத்து அவர்களுக்கு காதல் மொழி கதைத்து வந்த போது ஒருதடவை பெண் ஒருவரின் சகோதரனால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தனது தொலைபேசி நிலையத்தில் வேலைக்கு நின்ற யுவதியையே திருமணம் முடித்துள்ளார். அதுவும் நான்கு மாத கர்ப்பிணியாக்கி பெண்ணின் பெற்றொரும் உறவினர்களும் கொடுத்த அழுத்ததினாலேயே திருமணம் முடித்ததாகவும் அவ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த வாரம் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை ஆனைக்கோட்டையில் உள்ள அவளது தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனியே தனது வீட்டில் இருந்துள்ளார். தனது கடைக்கு வந்த நகரப்பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு இலவசமாக றீலோட் செய்து கொடுப்பதும் தனது தரமான கைத்தொலைபேசியை மாணவிக்கு சில நாட்கள் வைத்திருக்கும் படி கொடுத்தும் மாணவியை தனது பக்கம் இழுத்து தனது வீட்டிற்கு வரச் செய்து உல்லாசமாக இருந்துள்ளார். குறித்த மாணவி தனியே இருந்த இளைஞனின் வீட்டிற்கு செல்வதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மாணவியுடன் இளைஞர் உல்லாசமாக இருந்த போதே கையும் மெய்யுமாகப் பிடித்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
தாக்குதலில் தலையில் காயமடைந்த இளைஞனை அவர்களே வைத்தியசாலையின் அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் அவர், பொலிசாரிடம் முறையிடாது இருக்க மீண்டும் வந்து தாம் எச்சரித்ததாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/279.html

No comments:

Post a Comment