Sunday, June 29, 2014

கதிரையில் போர் விமானத்தை இறக்கிய விமானி: இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது !

அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளின் இராணுவ ரகசியங்கள் பலமாக பாதுகாக்கப்படுகிறது. ஆனால் சிலவேளைகளில் சில ரகசியங்கள் அல்லது நடந்த சம்பவங்களை அவர்கள் சமூகத்திற்கு வெளியிடுவார்கள் இதனை டீ-கிளாசிஃபைட் என்பார்கள்(DE CLASSIFIED) இவ்வாறு நடந்த சம்பவம் ஒன்றை அமெரிக்கா தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளது. போர்விமானங்களை தாங்கிச் செல்லும், யுத்தக் கப்பல் ஒன்றில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம், மீண்டும் தளத்திற்கு திரும்பும் வேளை அதன் முன் சக்கரம் வெளியே வரவில்லை. அதில் கோளாறு ஏற்பட்டதால அந்தச் சக்கரம் வெளியே வரவில்லை. இது இல்லாமல் அந்த விமானத்தை தரையிறக்கவும் முடியாது.

குறித்த இந்த ரக போர் விமானங்கள், தரையில் ஓடி தான் பறக்கவேண்டும் என்ற அவசியம் அற்றவை. ஹெலிகொப்டர் போல அப்படியே மேல் எழுந்து செல்லும். அதுபோல மீண்டும் தரையிறங்கும். ஆனால் எது எப்படி என்றாலும் தரை இறங்க அதன் முன் சக்கரங்கள் அவசியமாகும். இல்லை என்றால், விமானத்தின் முன் பாகம் சேதமடைந்துவிடும். இவ்வாறு பறப்பில் ஈடுபட்ட விமானம் தளத்தை அடைந்தவேளை அதன் சக்கரங்கள் வெளியே வராததால், அங்கே கதிரை போன்ற ஒரு ஸ்டூலை வைத்துள்ளார்கள். விமானம் அப்படியே வந்து அந்த ஸ்டூல் மேல் இறங்குகிறது. வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/293.html

No comments:

Post a Comment