Sunday, June 29, 2014

ஆட்டோ பைலட்டில் சென்று கடலில் வீழ்ந்தது மலேசிய விமானம்: புதிய புலனாய்வு தகவல் வெளியானது !

மாயமான மலேசிய விமானம் பற்றிய மர்மத்துக்கு விடை காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலனாய்வுக்குழு, தற்போது தமது புலனாய்வை புதிய கோணம் ஒன்றில் திருப்பியுள்ளது. அவர்களிடம் கிடைத்துள்ள சில தடயங்கள், புலனாய்வை புதிய கோணத்தில் திருப்பியுள்ளன என்று கூறப்படுகிறது. கடந்த 2005-ம் ஆண்டு ஹெலியோஸ் ஏர்வேஸ் விமானம் தடம் இலக்கம் 522-க்கு நேர்ந்தது போன்ற ஒரு சம்பவம் மாயமான மலேசியன் ஏர்வேஸ் விமானத்திலும் நடந்திருக்கலாம் என்பதற்கான தடயங்களே தற்போது கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. ஹெலியோஸ் ஏர்வேஸ் விமானம் 522, ஏவியேஷன் வட்டாரங்களில் ‘பிசாசு விமானம்’ என அழைக்கப்படுகிறது.
சரி. மலேசிய விமானம் MH370-க்கும், ஹெலியோஸ் ஏர்வேஸ் விமானம் 522-க்கும் என்ன தொடர்பு? இதோ, இதுதான்-
2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி விபத்துக்குள்ளான ஹெலியோஸ் ஏர்வேஸ் விமானம் 522, விமானத்தின் கேபினில் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால், விமானிகளும், பயணிகளும் நினைவிழந்த நிலையில் விபத்துக்கு உள்ளானது. மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்கலாம் என்கிறார்கள் புலனாய்வாளர்கள். மலேசிய விமானம் MH370 ஆட்டோ பைலட் இயக்கத்தில் பறந்து கொண்டிருந்தபோது, கேபினில் ஆக்சிஜன் சப்ளை நின்று போனதாலோ, அல்லது குறைந்து போனதாலோ விமானிகள் உட்பட அனைவரும் நினைவிழந்து இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் புலனாய்வில் தென்படுவதாக கூறப்படுகிறது.
மாயமான மலேசிய விமான புலனாய்வில் ஈடுபட்டுள்ள ATSB (Australian Transport Safety Bureau), தாம் ஆராய்ந்த சாட்டலைட் டேட்டாவில் இருந்து இப்படியான ஒரு முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஆட்டோ பைலட் இயக்கத்தில் பறந்த விமானம் சென்ற பிளையிங் பாத் பட்டர்னை வைத்து, இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனராம். இந்த சாத்தியம், ஒரு புலனாய்வு செய்கை ஊகம் (investigation working assumption) என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இந்த திசையில் புலனாய்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், மலேசிய விமானத்தை தேடும் பணி, இதுவரை தேடப்பட்டு வந்த மேற்கு ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து, தெற்கு திசையில் நகர்த்தப்படவுள்ளது. இந்த புதிய லொகேஷனுன், ஆஷ்திரேலிய மேற்கு கரையில் இருந்து 1,800 கி.மீ. தொலைவில் கடலில் உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/299.html

No comments:

Post a Comment