Monday, June 30, 2014

தலைமை ஆசிரியரின் காமவெறி புகைப்படம்: அதிர்ச்சியில் மாணவர்கள்

தலைமை ஆசிரியர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு அருகே காமவெறியை வெளியிடும் வகையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் எட்மோண்டன் நகரில் உள்ள க்ரெஸ்ட்மெர் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் பென்னி முல்லர். இவர் கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்கா தலைநகரான வாஸிங்டனில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு அருகில் காமவெறியை வெளியிடும் வகையில் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை மற்றொரு ஆசிரியர் வெளியிட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஆசிரியர் கழகம் அவருக்கு 500 டொலர் அபராதம் விதித்துள்ளது.
தற்போது முல்லர் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்து காட்டாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து முல்லர் கூறுகையில், ஆசிரியர் தொழிலின் மரியாதை குறையும் வகையில் எப்போதும் நடந்து கொண்டதில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment