Wednesday, June 25, 2014

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பகுதியில் அல்யுசியன் தீவுகள் உள்ளது.
அந்தப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
அல்யுசியன் தீவுகளில் உள்ள லிட்டில் சிட்கின் தீவின் தென்கிழக்கில் 23 கிலோ மீட்டர் தொலைவில் 114 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக பசிபிக் கடலில் கடல் அலைகள் உயரமாக எழும்பின. இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிபிக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவிலும் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ரவுல் தீவின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 126 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment