Sunday, June 29, 2014

பேரியல் அஸ்ரப் பத்தரமுல்ல சீலாரட்னவிடம் மன்னிப்பு கோரினார்!

கனேடிய பிரஜையிடம் பணம் கொள்ளை- கைக்குண்டு மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 05:27.10 AM GMT ]
கண்டி வாவிக்கரையோரத்தால் சென்று கொண்டிருந்த கனேடியப் பிரஜை ஒருவரின் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள குறித்த கனேடியப் பிரஜை நேற்று மாலை கண்டி வாவிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த நபர் ஒருவர் அவரிடமிருந்து பெருமளவு பணத்தை பறித்துச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கனடா பிரஜை கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரையம்பதியில் கைக்குண்டு மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றுக்கு செல்லும் ஒழுங்கையிலிருந்து வெடிக்காத கைக்குண்டொன்றை இன்று காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி ஒழுங்கையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்று கைக்குண்டை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmwz.html

பேரியல் அஸ்ரப் பத்தரமுல்ல சீலாரட்னவிடம் மன்னிப்பு கோரினார்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூன் 2014, 05:10.56 AM GMT ]
இலங்கையின் சிங்கப்பூருக்கான உயர்ஸ்தானிகர் பேரியல் அஸ்ரப், ஜனசெத்த பெரமுனவின் தலைவர் பத்தரமுல்ல சீலாரத்ன தேரரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சீலாரட்ன தேரர் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு சென்றிருந்த போது அவரை சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக அதிகாரிகள் காத்திருக்க செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடு ஒன்றை உயர்ஸ்தானிகரத்தில் கையளித்தார்.
இந்தநிலையிலேயே பேரியல் அஸ்ரப் தமது மன்னிப்பை கோரியுள்ளார்.
இனிவரும் காலத்தில் இவ்வாறான பிழைகள் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv6.html

No comments:

Post a Comment