Wednesday, June 25, 2014

அகதிகள் சட்டம் ஒரு இருட்டறை ?


இந்திய அரசே போர் குற்றவாளிகளும் கொலை குற்றவாளிகளும் இந்தியா வந்து செல்ல அனுமதி தரும் நீ ஏன் எங்கள்
தமிழ் மாணவி நந்தினுக்கு இந்தியாவில் மருத்துவம் படிக்க அனுமதி இல்லையா ?

கொலை வழக்கில் பிடிவாரண்டு உத்தரவு பெற்றுள்ள டக்ளஸ் தேவானந்தா இந்தியா வந்து செல்ல அனுமதி அளித்த இந்திய அரசே ஏன் எங்கள் தமிழ் மாணவி மருத்துவம் படிக்க அனுமதி இல்லையா ?

இந்திய அரசே பல லட்சம் தமிழ் மக்களின் இரத்தம் குடித்த போர் கொலை குற்றவாளியான இலங்கை அதிபர்க்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்க இடம் இருக்கும் உனக்கு ஏன் எங்கள் தமிழ் மாணவி மருத்துவம் படிக்க இடமில்லையா ?

எங்கள் தமிழ் மாணவி நந்தினி பிளஸ்-2 பொது தேர்வில் 1200க்கு 1170 மதிபெண்கள் பெற்றார்.மருத்துவ படிப்புக்கான கட்-ஆப்லில் 197.5 மதிபெண்கள் பெற்றார்.ஆனால் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் நந்தினிக்கு அழைப்பு கடிதம் வரவில்லை.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு மருத்துவ படிப்புக்குகாண தகுதி தேர்வுக்கு அனுமதி அளித்த இந்திய அரசே ஏன் வெற்றிபெற்ற தகுதியுடன் உள்ள மாணவர்களுக்கு இடம் தர மறுக்கிறாய் ?

கல்வி அதிகாரி ஒருவர் விளக்கம் கூறுகையில் இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் மருத்துவம் படிக்க சட்டத்தில் இடமில்லை என்றார்.

இந்தியாவில் மருத்துவம் படிக்க தகுதி உடையவர்கள் :

1.ஊழல் செய்யும் அரசு மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசு
2.போலி டாக்டர்களின் வாரிசு
3.பழ லட்சம் மக்கள் பணத்தை கொல்லை அடித்து அதை நன்கொடை என்ற பெயரில் தரும் தொழிஅதிபர்களின் வாரிசு.

போழிகளுக்கும் இச்சட்டம் இடம் தரும் இச்சட்டம் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ?

#சட்டம் ஒரு இருட்டறை

No comments:

Post a Comment