Saturday, June 28, 2014

கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் இன்று!

உலகம் முழுவதிலும் வாழும் அனைத்து இந்துக்களின் முருக வழிபாட்டுத் தலமாகவும்,. பிற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய சுற்றுலா நகராகவும் இருந்துவரும் பழைமையும் அற்புதங்களும் நிறைந்த கதிர்காமம் முருகப் பெருமானின் கொடியேற்றம் இன்று சனிக்கிழமை இரவு  7. 45 மணிக்கு இடம்பெறுகின்றது.
கதிர்காமக் கந்தனின் கொடியேற்றம் காண நாட்டின் நாற்திசைகளிலிருந்து இன மத மொழி கடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கதிர்காமத் தலத்தில் தங்கியுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி தலத்திலிருந்து கடந்த மாதம் 10ம் திகதி பாதயாத்திரையை ஆரம்பித்த வேல்சாமி என்னும் எஸ். மகேந்திரன் தலைமையிலான குழுவினரும் கொடியேற்ற நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இப்பாதயாத்திரைக் குழுவினரால் கொடியேற்றத்தை தொடர்ந்து வரும் 15 நாட்களும் பிரதான முருகன் சந்திதானத்திற்கு அருகிலுள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலை மாலை கூட்டுப் பிரார்த்தனை பஜனை என்பன இடம்பெறவுள்ளன.
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் வரும் ஜூலை மாதம் 13ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRcLbmqz.html

No comments:

Post a Comment