Monday, June 30, 2014

இரண்டாம் உலக மகா யுத்த இரும்பு பறவைகளின் கல்லறை...........




இது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் சக்கை போடு போட்ட இரும்புப்பறவைகளின் உறைவிடம். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றிய அனைத்து நாடுகளும் தங்கள் ஆயுத வரவை காட்டவேண்டும் என்பதற்கா போட்டி போட்டுக்கொண்டு புதிய புதிய உற்பத்திகளை களமிறக்கினர். அவை அனைத்தும் 1940 – மற்றும் 1944 ஆண்டு காலப்பகுதியில் படு பயங்கரமானவை ஆனால் தற்போது அவை அனைத்தும் ஓய்வ எடுத்துக்கொண்டிக்கின்றன
இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பங்கு பற்றிய போர்விமானங்கம் மற்றும் சரக்கு விமானங்கள் பலவற்றை ஒருவர் சேகரித்து தனது பாதுகாப்பில் வைத்திருந்தார். அந்த நபரின் பெயர் வோல்டர் சோப்லடா என்பதாகும். இவர் தான் ஆசை ஆசையாக சேகரித்தவற்றை அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் உள்ள நியூபெரி யில் உள்ள பூங்காவில் வைத்திருந்தார். ஒரு தனி மனிதனாக சேர்த்தவை அனைத்தும் இன்று வீணாகி கொண்டிருக்கின்றன.
ஆனால் அவர் இறந்ததில் இருந்து அவருடைய சேகரிப்புக்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. அனைத்து விமானங்களும் துருப்பிடித்து வீணாக போய்க்கொண்டிருக்கின்றன. இந்த விடயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர் ஜோன்னி யூ எனும் 24 வயது புகைப்பட கலைஞர் ஆவார். இந்த விமானங்கள் அனைத்தும் தற்போது பொலிவிழந்து எலும்புக்கூடுகளாக காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன. பார்ப்பதற்கே பாவமாக உள்ளது. இந்த தொகுப்பில் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க வான்படையினால் பாவிக்கப்பட்ட விமானங்களின் அனைத்து வகைகளும் உண்டு.
இந்த விமான சேகரிப்புக்கு சொந்தகாரரான சோப்லடா இறந்ததன் பின்னர் அவரது உறவினரால் இந்த விமானங்கள் அனைத்தும் மறைத்து வைக்கப்பட்டன. இந்த நிலையில் பழைய விமானம் ஒன்றை வாங்க விரும்பிய இந்த புகைப்பட கலைஞரினால் இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது பற்றி அவர் குறிப்பிடுகையில் வரைபடத்தின் படி உள்ள இந்த இடத்தை தேடிப்பார்ப்போம் என்று எண்ணியபோதுதான் இந்த விமாங்களின் இடத்தை நான் கண்டு பிடித்தேன் என்றார்.
சுமார் 50 விதமான இயந்திரங்கள் மற்றும் 30 விமானங்கள் இவ்வாறு கேட்பாரற்று கிடப்பதாக கூறினார். இவ்வாறு கிடக்கும் அனைத்து விமானங்களும் திறந்தவெளி நூதன சாலை போன்று தோற்றமளிக்கின்றன. என்வாழ்க்கையில் இதுவே நான் எடுத்த புகைப்படங்களில் மிகவும் பெறுமதியானவையும் புகழ் சேர்க்க கூடியவையும் என்றார். அவை அனைத்திலும் ஒரு வித கலைப்படைப்பு காணப்படுகின்றது. இந்த விமானங்களில் ஒன்றாக போயிங் 707 ம் உள்ளது. மேலும் ஏபி-25 வகை விமானம், பி-25, வல்ரீ- பிரி-15 பயிற்சி விமானம் மற்றும் குட் இயர் எப்.ஜி- 1டி கோர்சைய விமானமும் அடங்குகின்றது.
சோப்லடா உயிருடன் இருக்கும் வரை இந்த விமானங்களினால் இவருக்கு புகழ் கிடைத்தது. அவர் சுகவீனமுற்றதும் இந்த விமானங்களை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிற்று. கவனிப்பார் அற்று உள்ள விமானங்கள் அனைத்து உக்க ஆரம்பித்துவிட்டன. இந்த சேகரிப்பில் கடற்படை இயந்திரங்களும் உள்ளன. மேலும் வேறு பல சண்டைகளுக்கு பாவிக்கப்பட்ட விமானங்களும் இங்கு உள்ளன. இந்த விமானங்கள் அனைத்திற்குமே வரலாற்று ரீதியான கதைகள் உள்ளன. இவற்றை பற்றி எண்ணும்போதே எனக்கு மெய்சிலிர்க்கின்றது என்றார் யூ. இவை ஒவ்வொன்றுக்கும் பின்னால் வரலாற்று ரீதியான கதைகள் ஒளிந்திருப்பது மிகவும் அபூர்வாமனது ஆயினும் இவை வெளிக்கொணரப்படவேண்டும் என்று ஆதங்கப்பட்டார் யூ
             

No comments:

Post a Comment