டெக்சாஸ் மாகாணத்தில் காரில் சென்றுகொண்டிருந்த Richmond police அதிகாரி R Morales என்பவர் ரயில்வே கேட் மூடியதால் தனது காரை நிறுத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு இளம்பெண் தற்கொலை செய்ய ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இருந்தார். இதை தற்செயலாக பார்த்த அந்த அதிகாரி ரயில் மிக அருகில் நெருங்கி விட்டதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து, நொடிப்பொழுதையும் வீணாக்காமல் மிக வேகமாக சென்று அந்த பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுத்துவந்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். அவர் அந்த பெண்ணை இழுத்த பத்து வினாடிகளுக்குள் அந்த வழியாக ரயில் சென்றது.
இந்த அதிர்ச்சி தரும் காட்சி அவருடைய காரில் இருந்த கேமராவினால் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் சக்கைபோடு போடுகிறது. காதல் தோல்வியால் அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணுக்கு போலீஸார் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர்.
தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய R Morales என்ற போலீஸ் அதிகாரியை பொதுமக்களும், போலீஸ் உயரதிகாரிகளும் பாராட்டினர்.