Monday, June 30, 2014

கற்பழிப்பை தடுக்க சூப்பர் ஐடியாக்கள்!

இந்தியாவில் தினமும் கற்பழிப்பு அரங்கேறுவதற்கும், அது தொடர்பான செய்திகள் வெளிவருவதற்கும் பஞ்சம் இருக்காது.
பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க இயலாத சூழல் நாட்டில் அதிகரித்து வருவதை பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவங்கள் நமக்கு சுட்டி காட்டி வருகின்றன.
இந்த மாதிரியான கற்பழிப்பு சம்பவங்களில் பெண்கள் தப்பிப்பதற்கான இதோ 5 வழிகள்.
ஜீன்ஸ் ஆடை
உத்திர பிரதேசத்தின் வாரணாசி நகரை சேர்ந்த மாணவிகள் தீக்ஷா பதக் ( 21) மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா ( 23). இவர்கள் இருவரும் ஜீன்ஸ் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள உள்ளூர் காவல் நிலையத்திற்கு இது சிக்னல் செய்து விடும். இதனை அடுத்து பாதிக்கப்படும் நபரின் இருப்பிடத்தை எளிதில் கண்டறிந்து விட முடியும். ஜீன்சில் உள்ள டிராக்கர் வசதியால் அந்த பகுதியில் உள்ள 200 காவல் நிலையங்களுக்கு உடனடியாக சிக்னல்கள் சென்று விடும். இதனால் குற்றவாளி தப்பி விடுவது எளிதல்ல.
82 முறை மின்னதிர்வு
இந்திய மாணவர்களான எஸ்.ஆர்.எம். பொறியியல் பல்கலை கழகத்தை சேர்ந்த மணீஷா மோகன், நீலாத்ரி பாசு பால் மற்றும் ரிம்பி திரிபாதி ஆகிய 3 பேர் சேர்ந்து சமூக பயன்பாட்டுக்கான கருவி என்ற பெயரிடப்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளாடை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
தாக்குதல் நடத்துபவர்களின் உடலில் இந்த உள்ளாடை மின் அதிர்வை ஏற்படுத்தும். அதற்கேற்ற மின் அதிர்வு ஏற்படுத்தும் மின் சுற்றுகள் ஆடையில் இணைக்கப்பட்டுள்ளன.
அதனுடன் தாக்குதல் நடத்துபவரின் உடலில் 110 வோல்டேஜ் மின்சாரத்தை பாய்ச்சுவதுடன் 82 முறை மின்னதிர்வு தாக்குதலை நடத்தும் ஆற்றல் கொண்டுள்ளது.
அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் பெற்றோருக்கு உடனடியாக தகவல்களை அனுப்பும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்பும் இதில் உள்ளது.
கைக்கடிகாரம் போன்ற கருவி
டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் கைக்கடிகாரம் போன்று ஒரு கருவியை உருவாக்கி உள்ளான். 16 வயதான மனு சோப்ரா என்ற அந்த சிறுவன், சாலையில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க விரும்பியுள்ளான். அதன் விளைவாக உருவானதே இந்த கருவி.
தாக்குதல் நடத்துபவரின் உடலில் பட்டவுடன் மின் அதிர்வை ஏற்படுத்தும் இந்த கருவி. இது 6 நாள் முயற்சியில் உருவாக்கப்பட்டதாக கூறும் சோப்ரா, பாதிக்கப்படும் நபரின் நாடி துடிப்பு அதிகரிப்பை தொடர்ந்து தானாக செயல்பட ஆரம்பித்து விடும்.
இதில் மற்றொரு சிறப்பம்சமாக, அதனுள்ளேயே கேமிரா ஒன்றும் பொருத்தப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளான்.
மொபைல் அப்ளிகேஷன்
டெல்லியை சேர்ந்த 3 தொழில் நிறுவனர்கள் சேர்ந்து கற்பழிப்பிற்கு எதிரான மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
சவுரப் மூடி, தருண் சம்வேதி மற்றும் மனுஜ் பர்வால் ஆகிய மூன்று பேரும் சஸ்பெக்ட்ஸ் ரிஜிஸ்ட்ரி என்ற பெயரிடப்பட்ட அப்ளிகேஷனை கண்டறிந்துள்ளனர். இது நெருங்கிய 3 நண்பர்களிடம் உடனடியாக எச்சரிக்கை செய்தியை அனுப்பி விடும்.
தாக்குதல் நடக்கும் இடத்தில் சத்தத்தை பதிவு செய்வதுடன், செய்தியை சேகரித்து, தாக்குதல் நடத்துவோரின் படங்களை எடுத்து, பேஸ்புக் வலைதளத்திற்கு அனுப்பி விடுகிறது. பாதிக்கப்படும் நபரின் இருப்பிடத்தை ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் வழியே அடையாளம் காட்டி விடும். இந்த அப்ளிகேஷன் ஆன்ட்ராய்டு தளத்தில் செயல்பட கூடியது.
கவச உடை
இது போன்று மற்றொரு கருவி ஒன்றை தேசிய நவநாகரீக தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவிகளான நிஷாந்த் பிரியா மற்றும் ஷாஜத் அகமது ஆகிய இருவரும் இணைந்து கற்பழிப்புக்கு எதிரான கவச உடை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தவறான விசயங்கள் நடைபெற்றால் இந்த உடை உடனடியாக அதிர்வு அலைகளை உருவாக்கும்.
தாக்குபவரை கவச உடையில் உள்ள பட்டன் போன்ற அமைப்பு இயங்கி 110 வோல்டேஜ் அளவுள்ள மின்சாரத்தை வெளிப்படுத்தும். இதனால் அவர் 10-15 நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார். அதனை பயன்படுத்தி பாதிக்கப்படும் நபர் தப்பி விடலாம் என இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் புதிது புதிதாக கண்டுபிடிப்புகள் உருவானாலும், சமூக கொடுமைகளான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு தனிமனித ஒழுக்கம் மிக அவசியமான ஒன்று என்பது காலத்திற்கும் பொருந்துவதாகும்.

No comments:

Post a Comment